சென்னை: குற்றம் தவிர் திரைப்படத்தின் படபூஜையில் கலந்து கொண்ட இயக்குனர் கே ராஜன், திரைப்படப் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஏனெனில் கதைக்கேற்ற சூழலை சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளர்களிடம் இயக்குனர் தான் வாங்குகிறார் என பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் விவாதத்திற்கு தனது பங்காக கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன் தயாரிப்பில் பி. பாண்டுரங்கன் தயாரித்துள்ள படம் குற்றம் தவிர். இப்படத்தை கஜேந்திரா இயக்கியுள்ளார். பி கே எஸ் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். அட்டு படத்தில் நடித்த நாயகன் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாகவும், ஆராத்யா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தப்பு சரவணன், வினோதினி மற்றும் பலர் நடிக்க உள்ளனர். நாட்டில் உள்ளவர்கள் குற்றங்களை தவிர்த்து நல்லதையே நினைத்து பேசி, நல்லதையே செய்ய வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம்.
இந்த நிலையில் குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாந்த் லேபில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கே. ராஜன் தற்போது ஹாட்டாக போய்க் கொண்டிருக்கும் இசை பெரிதா, மொழி பெரிதா என்ற விவாதம் குறித்து கருத்து தெரிவித்துப் பேசினார்.
கே.ராஜனின் பேச்சு:
ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர்தான் வாங்குகிறார்.
இயக்குநர் செல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது. 10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்யூன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.
கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார். அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம், நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குதான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார். அது யாரா இருந்தாலும் சரி.
இன்று அது வழக்கில் இருக்கிறது. எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம் என்றார் கே. ராஜன்.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}