திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் நிறைவாக இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்களும் இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வழிபட்டால் கந்தசஷ்டி விரதம் இருந்த முழு பலனை பெற முடியும்.
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு இருக்கப்படும் சிறப்பான விரதம் சஷ்டி விரதம். ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியை மகா கந்தசஷ்டி என அழைப்பதுண்டு. இதுவரை சஷ்டி விரதமே இருந்தது கிடையாது என்பவர்களும் கூட இந்த ஆறு நாட்களும் விரதம் இருந்து முருகனின் அருளை பெற முடியும். ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி, சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படும். சஷ்டி திதி அன்று மாலை முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். இதை தரிசித்த பிறகு சிலர் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.
கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாவது நாளான சூரசம்ஷாரத்தன்று மட்டும் கூட விரதம் இருக்கலாம். சூரசம்ஹாரமான இன்று காலை முதல் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் காலையில் 2 மிளகு, மதியம் 2 மிளகு, மாலை 2 மிளகு என 6 மிளகுகளை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். காலையில் வீட்டில் விளக்கேற்றி வைத்து முருகனை மனதார வேண்டிய விரதத்தை துவக்கலாம்.
திருச்செந்தூரில் மாலை 04.30 மணிக்கு பிறகு தான் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்குள் சூரசம்ஹாரம் நிறைவடைந்து விடும். சூரசம்ஹாரம் முழுவதுமாக நிறைவடைந்த பிறகு விரதம் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும். பிறகு வீட்டில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி ஆகிய இனிப்புகள் செய்து நைவேத்தியமாக படைக்கலாம். முடியும் என்கிறவர்கள் ஆறு வகையான சாதம் படைத்து வழிபடலாம். ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். ஆற நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் நவம்பர் 08ம் தேதியான நாளை திருக்கல்யாணம் முடிந்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சூரசம்ஹாரம் அன்று முருகப் பெருமானின் அருளை பெற கந்தசஷ்டி கவசம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். கந்தகுரு கவசம், வேல் மாறல், திருப்புகழ் என எது வேண்டுமானாலும் படிக்கலாம். இது எதுவும் முடியாதவர்கள் ஓம் சரவண பவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை முடிந்த வரை சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் முருகா...முருகா என சொல்லிக் கொண்டே இருக்கலாம். முருகன் என்னும் திருநாமமே மிகப் பெரிய மந்திர சொல் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 08, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி
2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!
பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!
பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?
Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி
உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்
கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!
{{comments.comment}}