மியாமி: அமெரிக்காவில் அடுத்தடுத்து நடிகைகள் மரணமடைந்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபியா லியோன் என்ற 26 வயது போர்ன் நடிகை தனது வீட்டில் மூச்சுப் பேச்சின்றி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் இறந்து விட்ட தகவலை அவரது வளர்ப்புத் தந்தை மைக் ரோமிரோ தெரிவித்துள்ளார். மியாமியில் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் சோபியா லியோன். ஆபாசப் படங்களில் நடித்து வந்தார். அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாம்.

இந்த நிலையில் சோபியா லியோன் இறந்திருப்பதால், அவரது ஈமச் சடங்குகளைச் செய்யக் கூட போதிய பணம் இல்லாமல் தவிப்பதாக மைக் ரோமிரோ தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான நிதியுதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோபியா லியோன் மரணம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோபியா லியோன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார். 18 வயதிலேயே ஆபாசப் பட நடிகையாக அவர் மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக அமெரிக்காவில் நடிகைகள் பலர் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர்.
ஒரே வருடத்தில் 4வது நடிகை மரணம்

இந்த ஆண்டில் இறந்துள்ள 4வது நடிகை இவர். இதற்கு முன்பு காக்னி லின் கார்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா பீல்ட்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். இறந்த நான்கு பேருமே ஆபாசப் பட நடிகைகள் என்பது அதிர்ச்சி கலந்த ஒற்றுமையாக உள்ளது. அடுத்தடுத்து நடிகைகள், அதிலும் ஆபாசப் பட நடிகைகள் உயிரிழந்து வருவது அமெரிக்க திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}