கிரிக்கெட் வீரருடன் திருமணமா?.. பூஜா ஹெக்டேவின் அடுத்த பிளான்

Sep 27, 2023,09:34 AM IST

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே, கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக தீயாய் பரவி வருகிறது.


தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் டாப் ஹீரோயினாக இருந்த பூஜா ஹெக்டே, தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம், சர்கஸ் உள்ளிட்ட அவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. கடைசியாக சல்மான் கான் நடித்த "kisi ka bhai kisi ki jaan" என்ற படத்தில் நடித்தார் பூஜா. ஆனால் இந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. 




இதற்கிடையில் பூஜா ஹெக்டே, மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும், இது உண்மையா என தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். பூஜாவின் திருமணம் குறித்து தகவல் பரவுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதே போல் தகவல் பரவியது.


இதற்கு முன்பும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா திருமணம் செய்த கொள்ள உள்ளதாகவும், அவரின் சகோதரரின் திருமணத்தில் கூட பூஜா கலந்து கொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலை பூஜா திட்டவட்டமாக மறுத்ததால் அது அப்படியே அடங்கிப் போனது. தற்போது மீண்டும் அதே போல ஒரு தகவல் பரவ துவங்கி உள்ளது. 


பூஜா நடத்த அனைத்து படங்களுமே வரிசையாக தோல்வி அடைந்ததால் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக guntur kaaram படத்தில் பூஜா தான் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அவரை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் தற்போது பூஜாவின் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. இதனால் ஒருவேளை திருமணம்யசெய்து கொண்டு செட்டில் ஆகும் முடிவுக்கு வந்து விட்டாரா பூஜா ஹெக்டே என ரசிகர்கள் ஆர்வலமாக கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்