சென்னை: கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை உள்ள காலகட்டத்தில் மழைப்பொழிவு இருக்கும். இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த வருடம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து அடுத்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இன்னும் ஐந்து நாட்களில் கேரளாவுக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கேரளாவில் மழையை வரவேற்கும் ஆயத்த நிலைக்கு மக்கள் மாறி வருகின்றனர்.
இதற்கிடையே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}