சாதாரண ஸ்லீப்பர் கோச்சுகளிலும்.. இனி தலையணை, பெட்ஷீட்.. கட்டணம் செலுத்திப் பெறலாம்!

Nov 29, 2025,01:25 PM IST

சென்னை:  தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், இனி சாதாரண ஸ்லீப்பர் கோச்சுகளிலும் கட்டண அடிப்படையில் தலையணை மற்றும் போர்வை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய சேவை வருகிற ஜனவரி 1 முதல் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.


இதுவரை, ஏசி கோச்சுகளில் மட்டுமே இந்த வசதி இருந்தது. இனி சாதாரண ஸ்லீப்பர் கோச்சுகளில் பயணிக்கும் பயணிகளும், குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பெட்ஷீட், ஒரு தலையணை மற்றும் தலையணை உறை அடங்கிய ஒரு செட் ரூ.50க்கு கிடைக்கும். தனியாக பெட்ஷீட் மட்டும் வேண்டுமென்றால் ரூ.20, தலையணை மற்றும் உறை மட்டும் வேண்டுமென்றால் ரூ.30 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகம்




இந்த புதிய சேவை சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களுரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-மன்னர்குடி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை-பாலக்காடு எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை-ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், மற்றும் சென்னை எழும்பூர்-மங்களுரு எக்ஸ்பிரஸ் ஆகிய 10 ரயில்களில் முதலில் தொடங்குகிறது.


இந்த திட்டம், 2023-24 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'New Innovative Non-Fare Revenue Ideas Scheme' (புதிய புதுமையான கட்டணமில்லா வருவாய் யோசனைகள் திட்டம்) கீழ் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டது. இதற்கு பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டத்தின் கீழ், படுக்கை விரிப்புகளை வாங்குவது, துவைப்பது, பேக் செய்வது, ஏற்றுவது, விநியோகிப்பது மற்றும் சேமிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் ஒரு ஒப்பந்ததாரர் மேற்கொள்வார். இந்த சேவையின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் சென்னை கோட்டத்திற்கு ரூ.28.27 லட்சம் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரயில் பயணத்தின் போது, குறிப்பாக நீண்ட தூர பயணங்களில், சுத்தமான படுக்கை விரிப்புகள் கிடைப்பது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த புதிய கட்டண சேவை, சாதாரண ஸ்லீப்பர் கோச்சுகளில் பயணிக்கும் பலருக்கு ஆறுதலாக அமையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்