தங்கத் தமிழ் பேசு..!

Feb 05, 2026,03:17 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.... கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மொழி தமிழ் மொழி!! 


தமிழில் எழுதினால்....சொல்ல முடியாத அத்தனையையும் சொல்லி விடலாம்..... வார்த்தைகள்  விளையாடும்‌ மொழி நம் தமிழ் மொழி!


அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி.......இரட்டைக் கிளவி....ஒரு பொருட் பன்மொழி...... சிலேடை.....உவமை..... என இலக்கண செழுமை வாய்ந்த  மொழி  தமிழ் மொழி......




இரண்டடி குறளும்...ஔவையின் நற்றமிழும்.... பாரதி பாட்டும்..... எட்டுத் தொகையும், பத்துப்பாட்டு ம்.... எண்ணிலடங்கா தமிழ் இலக்கிய நூல்களும்..... கொட்டிக் கிடக்கும் தமிழ் மொழி என் தாய் மொழி...


திருவாசகம்....திருப்புகழ்.. திருமுருகாற்றுப்படை....திருப்பாவை....இன்னும் பல பக்தி இலக்கியங்கள் தந்த பக்திமொழி என் மொழி.... முத்தமிழ் போற்றும் என் முத்துக்குமரன் பேசிய ஞான மொழி.....


தமிழுக்கு அமுதென்று பேர்.....அமுதம் மட்டும் அல்ல.தமிழுக்கு வீரம் என்றும் பெயர்...... 


இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்கத்தமிழ்,பாவலர் பாடிடும் பைந்தமிழ்,,,,, தரணி போற்றும் தங்கத்தமிழ்....நற்றமிழ்.... தேன் தமிழ்.... செந்தமிழ்.....என்‌ தமிழ்!!!!


தமிழ் படித்தால் தன்னம்பிக்கை வளரும்.... தமிழ் பேசு....தமிழ் பாடு...தமிழோடு விளையாடு.....தமிழின் சிறப்பை....தமிழின் பெருமையை பறை சாற்று......


வாழ்க தமிழ்!!!வளர்க தமிழ்!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்