சென்னை: சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின் போது அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் என்ற புகார் எழுந்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்க அனுமதி கேட்டார்.

அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை பேச அவையில் அனுமதி இல்லை என அனுமதி மறுத்தார். டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். எடப்பாடி பழனிசாமி பேசுவது அவைக்குறிப்பில் பதிவேற்ற முடியாது என சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அவையில் இருந்து வெளியேற்றினர். அவையில் இருந்துவெளியேறிய அதிமுக எம்.எல்.ஏ.,க்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}