திருப்பதி: அக்னி நட்சத்திரம் எதிரொலியாக இந்த கோடை காலத்தில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பர். திருப்பதி ஒரு வைணவ திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள முக்கிய கோவில் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை காலத்தில் இங்கு வரும் பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டள்ளன. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறுகையில், கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல், கூல் பெயிண்டுகள், கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கின்றோம்.
நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். திருப்பதி ஏழுமலையான் கோவில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்திற்கு வரும் சாமானி பக்தர்களுக்கு முன்னரிமை அளிக்கப்படுகிறது. இதனால் கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}