சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
அதேபோல் 23 மற்றும் 24ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது திருத்தம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஒருங்கிணைந்த விரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள்,8,963 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் மாநில முழுவதும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இந்தப் பணிகளைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}