சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தகுதி பெறுவர். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுவதோடு வருகிற 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை, மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது நிரம்பிய அனைவரும் புதிய வாக்காளராக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். விண்ணப்ப படிவம் 6ல் வாக்காளர் பெயர் சேர்க்கவும், படிவம் 6பி-ல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் ,படிவம் 7ல் பெயர்
நீக்கவும் ,படிவம் 8ல் திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}