சென்னை: பொங்கலை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதினால், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை டூ தூத்துக்குடி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், தாம்பரம் டூ நெல்லை இடையே முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திருநெல்வேலிக்கு முன்பதிவு ரயில்
தாம்பரத்திலிருந்து ஜனவரி 11, 13 மற்றும் ஜனவரி 16ம் தேதிகளில் நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9.50க்கு புறப்படும் ரயில் விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் (ஜனவரி 12, 14, 17ம் தேதிகள்) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடையும். தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க பயணிகள் இன்றிலிருந்து முன் பதிவு செய்யலாம்.
தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில்
சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை தாம்பரத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14 மற்றும் ஜனவரி 16ல்) சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்லும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறு மார்க்கத்தில் ஜனவரி 15 , 17ம் தேதி ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30க்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}