சென்னை: வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது என்பது சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. வேலை,படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் வார இறுதி விடுமுறையை தன் சொந்த ஊர்களில் செலவிடுவதற்காக சமீபகாலமாகவே ரயில் மட்டுமின்றி, பேருந்துகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூன் 21,22 ஆகிய இரு நாட்களிலும் கூட்டத்தை சமாளிக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூன் 21ம் தேதி (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55க்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம்,அரியலூர், திருச்சிராபள்ளி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 8.45க்கு சென்றடைகிறது.

இதே ரயில் ஜூன் 22ம் தேதி (ஞாயிறு) மறுமார்க்கமாக இரவு 9.40க்கு புறப்பட்டு, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் அடுத்த நாள் காலை 8.15க்கு எழும்பூர் வந்தடைகிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூன்.18) தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!
தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!
கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை
நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை
பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
அனைத்துக் கோணங்களிலும் விசாரணை.. உண்மையை கண்டறிவோம்.. அமைச்சர் அமித்ஷா
டெல்லி செங்கோட்டை அருகே.. கார் வெடித்துச் சிதறியது.. பலர் பலி.. டெல்லி முழுவதும் உஷார்
{{comments.comment}}