"டிக்கெட் கொடுக்கும்மிடம்".. வச்சு கும்மிய ரயில்வே.. ப்ரூப் ரீடிங் பாருங்கப்பா ப்ளீஸ்!

Nov 11, 2023,05:52 PM IST
சென்னை: தவறில்லாமல் எழுதுவது என்பது ஒரு கலை.. எப்படி தவறில்லாமல் பேசுவது கலையோ அது போலத்தான் எழுதுவதும். எழுதும்போது பலருக்கும் தாம் சரியாகவே எழுதுவதாகத்தான் தோன்றும். எழுதி முடித்து விட்டு படிக்கும்போதுதான் தவறுகள் இருப்பது தெரிய வரும்.

பிழை திருத்தம்... அதாவது ப்ரூப் ரீடிங்.. இது எந்த அளவுக்கு முக்கியமானது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இன்று வரை அதன் தேவை நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பொது இடங்களில் போர்டுகள் எழுதும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பொருள் மாறி விடும், பிழையாகிப் போய் விடும்.



அப்படித்தான் நமது கண்ணில் பட்ட சில பிழைகளை இப்போது உங்களுக்கும் சொல்கிறோம்.  சென்னையில் பல இடங்களில் பிழையான வாசகங்களை அதிகம் பார்க்கலாம். அதிலும் ரொம்ப காலமாக இருந்து வந்த ஒரு பிழையான பெயர்ப் பலகை என்றால் அது குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் பெயர்தான்.

தென் சென்னை புறநகரில் உள்ள முக்கியமான ரயில் நிலையம்தான் குரோம்பேட்டை. மிக முக்கியமான வணிக தலமாக இப்போது மாறி விட்டது. தினசரி லட்சக்கணக்கானோர் இந்த பகுதி வழியாக வந்து செல்கிறார்கள். குறிப்பாக ரயில் நிலையத்தை ஆயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட முக்கியமான ரயில் நிலையத்தில், ரயில் நிலையப் பெயர்ப் பலகை நீண்ட காலமாகவே தவறாகவே இருந்தது.

அதாவது "கிரோம்பேட்டை" என்றுதான் இதன் தமிழ்ப பெயர் இடம் பெற்றிருந்தது. குரோம்பேட்டை என்ற பெயரை யார் கிரோம்பேட்டை என்று மாற்றியது என்று தெரியவில்லை. இந்தத் தவறை யாரேனும் சுட்டிக் காட்டினார்களா என்றும் கூட தெரியவில்லை. தொடர்ந்து இப்படியேதான் நீண்ட காலமாக இருந்தது. இப்போதுதான் இதை சரி செய்து "குரோம்பேட்டை" என்று சரியான முறையில் எழுதி வைத்துள்ளனர்.

அதேபோல இன்னொரு தவறை திரிசூலம் ரயில் நிலையத்தில் பார்க்கலாம். அங்குள்ள டிக்கெட் கவுண்டருக்குப் போனால், உங்களை கிறங்க வைத்து வரவேற்கும் போர்டைப் பார்க்கலாம்.. அதாவது டிக்கெட் கொடுக்கிமிடம் என்ற வார்த்தையை "கொடுக்கும்மிடம்" என்று ஒரு அழுத்து அழுத்தியிருப்பார்கள். இன்று வரை அந்த போர்டு அப்படியேதான் கும்மிக் கொண்டிருக்கிறது.




ஏன் இப்படிப் போட்டுக் கும்மியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது மாதிரியான பொது வெளிகளில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில், பெயர்களை சரியாக எழுதியிருக்கிறோமா என்று கூட செக் செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதை அலட்சியம் என்று சொல்வதா அல்லது அறியாமை என்று சொல்வதா.. தெரியவில்லை.

தயவு செய்து சரியா பேசுங்க.. சரியா எழுதுங்க.. என்று சொல்வதைத் தவிர நமக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பார்க்கலாம், கிரோம்பேட்டைக்கு ஒரு விடிவு காலம் பிறந்தது போல இந்த "கும்மி"க்கும் ஏதாவது மோட்சம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

news

இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்‌.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

news

பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை

news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

news

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!

news

அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!

news

வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்

news

2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்