இந்தியாவிலிருந்து வருவோருக்கு விசா தேவையில்லை.. இலங்கை அதிரடி

Oct 24, 2023,10:16 AM IST
கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு விசா தேவையில்லை என்ற முக்கியமான முடிவை இலங்கை அமைச்சரவை எடுத்துள்ளது. இதுதொடர்பான பரீட்சார்த்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, தய்லாந்து, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்த விசா தேவையில்லை திட்டத்தை அமல்படுத்தவுள்ளது இலங்கை. பரீட்சார்த்த முயற்சியாக அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இதை அமல்படுத்தவும் இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகுகையில், இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார் அவர்.



கடந்த வாரம்தான் இலங்கைக்கு சுற்றுலா வர விரும்பும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஐந்து நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வர விசா தேவையில்லை என்ற திட்டத்தால் இந்தியாவிலிருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் உள்ளிட்டவை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார சீரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கைக்கு இது ஊக்கம் அளிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது..எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!

news

ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்

news

குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!

அதிகம் பார்க்கும் செய்திகள்