- அ.சீ. லாவண்யா
கொழும்பு: டிட்வா புயல் எதிரொலியாக, இலங்கையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் தாக்கம் காரணமாக பல மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நாட்டின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் ஆறுகள் கரையெழுந்ததால் கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் வீடுகள் பல மணி நேரமாக மண்ணின் கீழ் புதைந்துள்ளன. சில பகுதிகளில் ரோடுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் உதவிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அணுகவே முடியாமல் தவிக்கின்றன.
கொழும்பு, கண்டி, ரத்தினபுரம், கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து ஹெலிகாப்டர்கள், படகுகள், சிறப்பு மீட்பு குழுக்களுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆபத்தான மலைப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.
பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த 44,000 பேர் அவசர தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளைப் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலையும் உள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி இலங்கைக்கு கை கொடுத்து வருகின்றன. இந்தியா, ஐநா மனிதாபிமான அமைப்புகள், சிவப்பு சிலுவை அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் உணவு, மருந்து, மீட்பு கருவிகள் போன்றவற்றை அனுப்பத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் வெள்ளநீர் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}