கொழும்பு: இலங்கையின் கடலோரப் பகுதியை நடந்தே கடந்து உலக சாதனை படைத்துள்ளார் 25 வயதேயான இளைஞர் ஷஹமி ஷாஹீத். இவர் நடந்து கடந்து தூரம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 1500 கிலோமீட்டர் தான்!
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கலுத்தரா மாவட்டத்தில் உள்ள பேருவளை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஷஹமி ஷாஹீத். 25 வயதான ஷாஹீத்துக்கு தனது நாட்டின் கடலோரத்தை நடந்தே கடந்து சாதனை படைக்க ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார். 45 நாட்களில் தனது பயணத்தை முடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இதை முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
பேருவளையில் தொடங்கிய இவரது பயணம் அம்பலன்கோடா, ரன்னா, மிரிஸல்ஸா, ஹம்பந்தோட்டா, வெல்லவயா, மொனரகலா, சியம்பலந்துவா, பொட்டுவில், நிலவேலி, முல்லைத்தீவு, பரந்தன், யானை இறவு, சுன்னாகம், மன்னார், மேடச்சியா, அனுராதபுரா, புத்தளம், மரவிளா என்று கடந்து கொழும்பு வழியாக பேருவளையில் முடிவடைந்தது.
இலங்கையின் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஷாஹீத். இவரது இந்த நடை பயணத்திற்கு இலங்கையில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. குறிப்பாக இளைஞர் சமுதாயதம் இவருக்கு ஆதரவாக போகும் இடமெல்லாம் திரண்டு வந்து ஆதரவு அளித்தது.
தனது பயணம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் போட்டபடியே பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஷாஹீத். இலங்கை மக்களே கூட அறியாத பல்வேறு இடங்கள் குறித்து அவர் தனது வீடியோக்களில் கூறியதால் இலங்கை மக்களுக்கே இவரது பயணம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த இடங்களுக்கெல்லாம் போக வேண்டும் என்ற ஆர்வமும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகின. ஷாஹீத்தின் பயணம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதனை படைத்த ஷாஹீத், தனது பயணத்தின் நிறைவாக அதிபர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். அவரை அதிபர் விக்கிரமசிங்கே வெகுவாக பாராட்டினார். மேலும் சிறப்புப் பரிசையும் வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து இதுபோல ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்யுமாறும் அவர் ஊக்கம் அளித்தார்.
இளைஞர் ஷஹமி ஷாஹீத்தின் இந்த நடை பயணம் இலங்கை மக்களிடையே மிகப் பெரிய பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!
பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!
Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!
ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!
செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்
{{comments.comment}}