ஸ்ரீ ராம நவமி: தெய்வீகத்தைத் துறைந்து சாதாரண மனிதனாக வாழ்ந்த.. ஸ்ரீராமன்!

Mar 26, 2026,11:54 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 26 மார்ச் மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பங்குனி மாதம் 13ஆம் தேதி "ஸ்ரீராமநவமி" அனுஷ்டிக்கப்படுகிறது. இறைவன் தனது தெய்வீக சக்திகளை துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக, ஏக பத்தினி விரதனாக  வாழ்ந்து காட்டிய அவதாரமே 'ராம அவதாரம் 'திருமாலின் அவதாரங்களில் சிறப்பு மிக்கதும்,அறம் நிறைந்ததும் ராம அவதாரமே. 


ராம அவதார வரலாறு:


தசரதன் என்னும் மன்னன்  அயோத்தி தேசத்தை ஆட்சி செய்து வந்தார். திசைகளை எண் திசைகளாக  பிரிப்பார். இந்த எண் திசைகளோடு,கீழ் திசை  மேல்  திசை சேர்த்து 10 திசைகளையும் தன்னுடைய ரதத்தை திறம்பட செலுத்துபவர் என்பதால் இவரை "தசரதன்" என்ற பெயரால் அழைப்பார்கள். தசரதனுக்கு  மூன்று மனைவிகள் கோசலை சுமித்திரை,கைகேயி, ஆனால் அவருக்கு தனக்குப் பின் நாட்டை  ஆள பிள்ளை இல்லாததால் தசரதர் பெறும் கவலையுற்றார்.


அதற்காக ஒரு யாகம் நடத்த "ரிஷ்ய சிங்கர்" எனும் முனிவரை அழைத்து  "புத்திர காமேஷ்டி யாகம்" நடத்தினார். அந்த யாக அக்னியில் இருந்து ஒளி பொருந்திய ஒரு உருவம் தோன்றி தன் கரங்களில் இருந்த பாயாசம் நிறைந்த தங்க பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து "இந்த பாயாசத்தை உனது மனைவிகளுக்கு பிரித்துக் கொடு, அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்" என்று கூறி மறைந்தது. தசரதன் பாயாசத்தில் பாதியை கோசலைக்கும்,மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்ராவிற்கும், மேலும் மீதம் இருந்த பாதியை கைகேயைக்கு அளித்து அதன் பிறகு எஞ்சிய பாயாசத்தை மீண்டும் சுமித்ராவுக்கு கொடுத்தார். 


கோசலைக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம், கடக லக்னத்தில் கடக ராசியில், நவமி திதியில் 'ராமபிரான்' அவதரித்தார். கைகேயிக்கு 'பரதன்' பிறந்தான்.இருமுறை பாயாசம் அருந்திய சுமித்ராவுக்கு லட்சுமணனும், சத்துருக்கணும பிறந்தனர்.  ராமபிரான் பிறந்த தினத்தையே நாம் "ராம நவமி  " என்று கொண்டாடுகிறோம்.

 

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே  தின்மையும்  பாவமும் சிதைந்து தேயுமே ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே இம்மையே ராமா வென இவ்விரண்டு எழுத்தினால்."


ராமர் வழிபாடு முறைகள்:


ராமர் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபாடுகள் செய்ய குடும்ப நலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும்.நன்மைகள் பலவும் வந்து சேரும் என்பது ஐதீகம். அதிகாலை குளித்து பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து அதற்கு குங்குமம் சந்தனம், துளசி மாலைகள் அணிவித்து, வெற்றிலை- பாக்கு, பழம், பூ வைத்து " ஸ்ரீ ராம ஜெயம் "எனும் ராம நாமத்தை  உச்சரித்து கொண்டே இருப்பதே விசேஷம்.


நைவேத்தியம் :


வழிபாட்டின் போது நைவேத்தியமாக பாயாசம் (குறிப்பாக பால் பாயாசம்), சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம்,பானகம், வடை, புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என அவரவர்களால் இயன்றவற்றை படைத்து விரதம் இருப்பவர்கள் பூஜை முடிந்த பிறகு பிரசாதம்  உட்கொள்வது சிறப்பு.


அன்றைய தினம் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ராமர் அபிஷேக, அலங்கார பூஜைகளை கண்டு களிப்பதும், கோவிலில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிப்பதும் சிறப்பு.


"ஸ்ரீ ராம ஜெயம்" என்பதை 108 முறை அல்லது 1008 முறை எழுத துவங்கலாம். ஸ்ரீ ராமா என்னும் நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிப்பது அன்பும், அறிவும், ஆற்றலையும் பெருக்கும்.மனதில் அமைதியும்,மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும்.


பலன்கள்:


ஸ்ரீ ராம நவமியில்   ராமர் பூஜை செய்பவர்கள் குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும்,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும், குடும்ப ஒற்றுமையும் செழிப்பும் அஷ்ட ஐஸ்வர்யமும்  கிடைக்கப்பெறுவார்கள்.


ஸ்ரீ ராமர் காயத்ரி :

 

"ஓம் தாசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி    

தந் நோ  ராம: 

ப்ரசோதயாத்."


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்