பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!

Jan 21, 2026,11:46 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பார்வதி தேவியின் அவதாரமான சௌடேஸ்வரி அம்மன் தேவாங்க குல மக்களின் குலதெய்வமாக போற்றப்படுகிறார்.


தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் தேவாங்க குல மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் தை மாதத்தில் சௌடேஸ்வரி அம்மன் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2026 சேலத்தில் பொன்னம்மாப்பேட்டை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்திலும், அரிசி பாளையம்- சாமிநாதபுரம்  மற்றும் கன்னட தேவாங்கர் நிறைந்த சேலம் குகை பகுதியில் சௌடேஸ்வரி அம்மன் திருவிழா சென்ற வாரம் ஜனவரி 14-ஆம் தேதி துவங்கி ஜனவரி 19ஆம் தேதி வரை வெகு சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.


புராணக்கதை சௌடேஸ்வரி அம்மன் வரலாறு :


கிருஷ்ணதேவராயர் காலம்:




தமிழகத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விஜயநகர பேரரசின் காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது. கிருஷ்ணதேவராயரின் மனைவி குழந்தை பாக்கியத்திற்காக  சௌடேஸ்வரி அம்மனை வழிபட்டதாக கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.


நந்தா வரம் கதை:


காசியில் மன்னன் பிராமணர்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்த போது அந்த வாக்குறுதியை நிரூபிக்க செடேஸ்வரி அம்மனை நந்தா வரத்திற்கு வேண்டி பிராமணர்கள் வரவழைத்தனர். அம்மன் அங்கு வர அவளைக் கண்டதும் பிராமணர்கள் திரும்பி பார்த்ததால் அம்மன் கல்வடிவம் "ஸ்வர்ண விக்ரகம் "ஆக மாறி அங்கேயே நிலை கொண்டார். அதன் பிறகு  நந்தாவரத்தில்  அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது என்று புராணக் கதைகள் கூறுகின்றன.


சௌடேஸ்வரி அம்மன் பெயர் காரணம்:


பார்வதி தேவியின் வடிவமான சௌடேஸ்வரி அம்மன், தேவாங்க சமூகத்தின் குலதெய்வம் ஆவார். சிவபெருமானின் அம்சமான தேவா ரிஷி மக்களுக்கு ஆடை நெய்யும் தொழிலை கற்பிக்க பிறந்தார். அச்சமயம் அவரை தாக்கிய கொடிய அரக்கர்களை அம்மன் அழித்தார் என்றும் அதன் பிறகு அம்மன் "சௌடேஸ்வரி" என பெயர் பெற்றார் என்றும் கதைகள் கூறுகின்றன.


தேவாங்கர் புராணத்தின் படி தேவலர் தேவாங்கர் சமூகத்தின் மூலாதாரமாக விளங்குகிறார். ஆடைகளை உருவாக்கவும் உலகிற்கு நெசவு நெய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து தேவலர் உருவானார் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணுவின் தொப்புளில் இருந்து தாமரை நூல் பெற்று வரும் வழியில் ஐந்து அசுரர்களின் ஒரு குழு அவரை தாக்கியது, அமாவாசையான இருட்டில் அவர்கள் வலிமை மிக அதிகமாக இருந்தது. தேவலர் விஷ்ணுவின் சக்கரத்தை கொண்டு போராடி தோல்வி அடைந்தனர். 


கடைசியில் அவரை பாதுகாக்க சக்தி அம்மனை வேண்டினர். தேவி சக்தி மகிமையுடன் இருளை விரட்டும் பிரகாசமான கிரீடம் அணிந்து, சூலம் ஏந்தி, இதர ஆயுதங்களை கையில் கொண்டு சிங்கத்தின் மீது அமர்ந்து அந்த அசுரர்களை வென்றார். அந்த அசுரர்களின் ரத்தம் வெள்ளை, கருப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது எனவும் அவர்களுடைய வண்ணமயமான ரத்தத்தில் தேவலர் நூலை சாயம் ஏற்றினர் என்றும், அன்று முதல் அந்த அம்மன் சௌடேஸ்வரி அல்லது "ச்சவு டேசு  வரி "( சௌட / சவுட / சூட = பிரகாசம்) என்று அறியப்பட்டார் என புராணங்கள் கூறுகின்றன. 


ஒவ்வொரு அமாவாசை நாளிலும் சௌடேஸ்வரி அம்மனை வணங்கும்படி தேவலருக்கு அறிவுரை கூறினார். பின்னர், தேவலர் ஹிமாலய மலையின் தெற்கு பகுதிக்கு சென்று அமோத நகரை தலைநகராகக் கொண்டு "சகர "நாட்டினை ஆண்டார். புதிய ஆடைகள் நெய்து மும்மூர்த்திகள், திரி தேவிகள்,தேவர், அசுரர்,கந்தர்வர் மற்றும் சாதாரண மக்களுக்கு கொடுத்தார். மகா தேவரின் உடலில் இருந்து தோன்றியதாலும், தேவர்களின் உடல் பாகங்களை மறைப்பதற்கு தேவலர் துணிகளை அளித்ததாலும், அவரது சமூகத்தினர் "தேவாங்கர்" (அங்க =உடல் அங்கம்) என பெயரிடப்பட்டனர். கடவுளின் உடலுக்கு ஆடை அணிவித்தவர்கள் என்று பொருள்.


தேவலர் சூரிய தேவனின் சகோதரி தேவதத்தையை மணந்தார் என்றும், அதனால் சூரியன் தேவாங்கர்களின் முதல் சம்பந்தி ஆவார் என்றும் கூறப்படுகிறது. சௌடேஸ்வரிஅம்மன் கோவில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் அமைந்துள்ளன. சேலம்- பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, அரிசி பாளையம், செவ்வாய்பேட்டை ,குகை, நாமக்கல் (காக்காவேரி) ராசிபுரம் அருகே, திருப்பூர் (கணக்கம்பாளையம், தாராபுரம்) கோவை மற்றும் அந்தியூர் (தவுட்டுப்பாளையம்) இன்னும் பல ஊர்களில் அமையப்பெற்றுள்ளன.


இவ்வாறு தேவாங்கர் தேவல மகரிஷியின் வழித்தோன்றல்களாக, நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கும் ஒரு சமூகத்தினர் ஆகும். இவர்கள் விஜய நகர பேரரசு காலத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர்,என்றும் 'தேவா' என்றால் 'கடவுள்' 'அங்க' என்றால் 'உடல்' அதாவது கடவுளின் உடல் என்று பொருள்படும். மேலும் இவர்கள் தேவாங்க புராணம் என்ற புனித நூலை அடிப்படையாகக் கொண்டு சௌடேஸ்வரி அம்மனை வழிபட்டு நெசவுத்தொழிலின் மூலம் தங்கள் கலாச்சாரத்தை பேணி வருகின்றனர்.


மேலும் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சிறப்புகளை பற்றி அடுத்த பதிவில் தொடர்ச்சியாக காணலாம். இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

news

பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!

news

விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

news

ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

news

வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!

news

தாலாட்டும் நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்