எனது மனைவி, பிள்ளையை கைவிடவில்லை.. சித்தப்பாவால் வந்த வினை இது.. ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

Mar 14, 2023,05:14 PM IST

சென்னை : சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு, தான் தனது மனைவி, பிள்ளைகளை கைவிடவில்லை என ஸ்ரீதர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். 


சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கி, பிறகு சோஹோ நிறுவனத்தை துவக்கி, சர்வதேச அளவில் சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ரீதர் வேம்பு. இவரது நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார் ஸ்ரீதர் வேம்பு. இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு பற்றி அவரது மனைவி பிரமீளா சீனிவாசன் அளித்துள்ள பேட்டி, பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


ஸ்ரீதர் வேம்பு தன்னையும், தனது மகனையும் கைவிட்டு விட்டதாகவும், தங்கள் இருவருக்கும் பொதுவாக இருந்த சொத்துக்களையும், பங்குகளையும் ஸ்ரீதர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் ஸ்ரீதரின் மனைவி பிரமிளா சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார். இதனை ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தியாக வெளியிட்டதால் பரபரப்பானது. 




ஸ்ரீதர் வேம்பு பற்றி அவரது மனைவி முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. ஆனால் தனது மனைவி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும், தான் யாருடைய பங்குகளையும் மாற்றவில்லை என்றும் ட்விட்டர் மூலம் ஸ்ரீதர் வேம்பு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள ட்வீட்டுகள்:


எனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் சில செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்கிறேன். இதை பெரும் மன வலியுடன் எழுதுகிறேன். எனது தொழில்வாழ்க்கை போல அல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமயமானது. ஆட்டிசம் எங்களது வாழ்க்கையை அழித்து விட்டது. நான் தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைக்குப் போகும் அளவுக்கு மன அழுத்தத்திற்குள்ளானேன்.


நானும் எனது மனைவி பிரமீளாவும் கடந்த 15 வருடங்களாக ஆட்டிசத்திற்கு எதிராக போராடி வருகிறோம். அவர் ஒரு சூப்பர் மாம். அவரது லட்சியமும், விவேகமும்தான் எங்களது மகனை ஆட்டிசத்திலிருந்து மீட்டு வருகிறது. அவருடன் இணைந்து நானும் பாடுபட்டேன். எங்களது மகனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தோம். எனவே எங்களது மகனுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பது எனக்குத் தெரியும்.


எங்களது மகனுக்கு வயதானபோதுதான் (இப்போது 24 வயதாகிறது) எங்களது சிகிச்சைகள் எந்த பலனையும் கொடுக்கவில்லை என்று தெரிந்தது. இதனால் ஊரக இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தால் அவன் சரி ஆவான் என்று நினைத்தேன். மக்களுடன் அதிகம் இருப்பததற்கும், அவர்களுக்கு உதவவும் நான் விரும்பினேன். ஆனால் நான் ஆட்டிசத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதாக எனது மனைவி கருதினார். கடைசியில் எங்களது திருமண பந்தம் அப்போது முடிவுக்கு வந்தது.


துரதிர்ஷ்டவசமாக எங்களது திருமண முறிவு வேறு பிரச்சினையை உருவாக்கியது. எனக்கு எதிராகவும், சோஹோ குழுமத்தின் உரிமை தொடர்பாகவும் புதுப் புது புகார்களை அவர் கோர்ட்டில் கூற ஆரம்பித்தார்.  மீடியாக்களையும் அணுக ஆரம்பித்தார். இப்போது வழக்கு அமெரிக்க கோர்ட்டில் உள்ளது.  அது ஒரு திறந்த புத்தகம்.


நான் எனது நிறுவன  பங்குகளை யாருக்கும் மாற்றவில்லை.  நான் அமெரிக்காவில் 24 ஆண்டுகள் வசித்துள்ளேன். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் எனது நிறுவனத்தை தொடங்கினேன். எனவே நிதி ரீதியாக பிரமீளாவையும், எனது மகனையும் நான் கைவிட்டு விட்டேன் என்பதை ஏற்க முடியாது. இது கற்பனையானது.  நான் வாழ்வதை விட மிகச் சிறப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நான் அவர்களை முழுமையாக ஆதரித்து வந்துள்ளேன்.


எனது கடந்த 3 ஆண்டு கால அமெரிக்க சம்பளம் அவரிடம்தான் இருக்கிறது. எனது வீட்டையும் அவருக்கே கொடுத்து விட்டேன். அவருடைய அறக்கட்டளையும் சோஹோ���ான் உதவுகிறது. எனது சித்தப்பா ராம்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். அவருக்கு புற்றுநோய் உள்ளது. எனது வீட்டில்வாடகை கூட செலுத்தாமல் தங்கிக் கொள்ள அனுமதித்தேன். அவர்தான் என்னைப் பற்றியும், எனது சகோதர, சகோதரிகள் குறித்தும் அவதூறு கிளப்பிக் கொண்டுள்ளார்.


பல ஆண்டுகளுக்கு முன்பே எனது தந்தையை விட்டு பிரிந்து போய் விட்டார் ராம். அவருடன் பல வருடமாக தொடர்பே இல்லாமல் இருந்தது.  நான்தான் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு அழைத்தேன். அனுதாபத்தின் அடிப்படையில்தான் இதைச் செய்தேன். ஆனால் அவரோ எனது குடும்பத்தையே பிரித்து விட்டார்.


எனது தந்தையை மிகவும் அவதூறாக பேசியவர் சித்தப்பா. ஆனால் எனது தந்தை மிக மிக நல்லவர். யாரையும் புண்படுத்தாதவர். அவரைப் போய் இப்போது பிரமிளா நம்புகிறார்.  எனது வாழ்க்கை மிகவும் சோகமானது. சித்தப்பா செய்த செயல்களுக்காக நான் எனது பிள்ளை, மனைவியை விட்டுப் பிரிந்துள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்திக் கொண்டுள்ளேன்.


எனது மனைவி, மகனுக்கு தொடர்ந்து உதவி வருகிறேன். நான் சாகும் வரைஇந்த உதவிகள்தொடரும். உண்மையே வெல்லும். நீதி வெல்லும் என்று கூறியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.


சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்