வருத்தப்படாதீர்கள் வாலிபர்களே.. மீண்டும் வருகிறார் ஸ்ரீதிவ்யா.. மெய்யழகன் கார்த்தியுடன் கை கோர்த்து!

Aug 24, 2024,12:58 PM IST

சென்னை: நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகியாக கமிட்டாகியுளள்ள நடிகை ஸ்ரீதிவ்யா, மெய்யழகன்  படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் லதா பாண்டி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவருடைய நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தமிழில்  நடித்த முதல் படமே இவருக்கு  திருப்புமுனையாக அமைந்தது. 




இதன் பின்னர் இசையமைப்பாளர் ஜி. வி பிரகாசுக்கு ஜோடியாக பென்சில் படத்தில் நடித்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வரவே ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளக்காரத்துரை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைளில் ஒருவராக திகழ்ந்தார். இதனிடையே ஸ்ரீ திவ்யா சினிமாவில் சில காலமாக தலை காட்டாமல் இருந்து வந்தார்.


இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெய்யழகன் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் கார்த்தி  நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.இது கார்த்தியின் 27-வது படமாகும். இவர்களுடன் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர  இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் நாயகியாக கம்பேக் கொடுத்த ஸ்ரீதிவ்யா மெய்யழகன் படத்தின்  டப்பிங்கில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் டப்பிங் பேசுவது போன்ற புகைப்படம்  வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்