கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்சே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் இவர் பொறுப்பேற்ற பின் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும், அதிபருக்கு எதிராகவும் போர் கொடி ஏந்தினர்.
இதன் காரணமாக அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்பாய ராஜபக்சே. பின்னர் அமைச்சர்களின் ஆதரவுக்கு இணங்க கடந்த 2022 ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை நாட்டின் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இது ஒன்பதாவது அதிபர் தேர்தலாகும். விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் இந்த வாக்கு பதிவில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களம் காண்கின்றனர். மேலும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சாவின் மகள் நமல் ராஜ்பக்ச உட்பட 38 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார். நாளை மதியத்திற்குப் பிறகு இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள வாக்குச்சாவடியில் ரணில் விக்ரமசிங்கே தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}