- ராஜஸ்ரீ என்கிற வி பி ஸ்ரீநிவாசன்
ரவி நிறைய ஆன்மிக விஷயங்களை அறிந்தவன். சிறு சிறு ஆன்மிக சொற்பொழிவுகளையும் நிகழ்த்துவான்.
ஆன்மிகநாதன் என்ற பெயரில் ஆன்மிக பத்திரிகை ஒன்றில் ஆன்மிகம் சம்பந்தமாக வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்களை எழுதி வந்தான்.
ஒரு நாள் அவன் மனைவி அவனிடம் நீங்கள் ஆன்மிகத்தில் பலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறீர்கள். நானும் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்டாள்.
அதற்கு ரவி தாராளமாகக் கேள் என்றான்.
அவன் மனைவி கடவுளை விட உயர்ந்தது எது? என்று கேட்டாள்.
அதற்கு ரவி இது ஒரு சின்ன கேள்வி. இதைப் போய் கேட்கிறாயே என்றான்.

அவன் மனைவி சின்ன கேள்வியோ பெரிய கேள்வியோ நறுக்கென்று பதிலை கூறுங்கள் என்றாள்.
ரவியும் கடவுளை விட உயர்ந்தது தபால் பெட்டி என்றான்.
அதைக் கேட்ட அவள் மனைவி குழம்பினாள்.
பிறகு ரவியிடம் தபால் பெட்டியா? எப்படி? புரியவில்லையே என்றாள்
அதற்கு ரவி இந்த உலகத்தையே படைத்து காத்தருளும் கடவுளை நம்பாதவர்கள் கூட ஒரு சிவப்பு நிற இரும்பு தபால் பெட்டியில் கடிதம் போட்டால் போய் சேர்ந்துவிடும் என்று நம்புகிறார்களே. அதனால் கடவுளை விட உயர்ந்தது தபால் பெட்டி என்றான்.
அதைக் கேட்ட அவன் மனைவி சிரித்தவாறு ஆஹா, இப்படி சிறப்பான பதிலை கூறிய நீங்கள்தான் எவ்வளவு உயர்ந்தவர் என்றாள்.
ரவி இல்லையில்லை. என்னை விட உயர்ந்தவர் ஒருவர் இருக்கிறார் என்றான்.
அவன் மனைவி ஆச்சரியத்துடன் அப்படியா, யார் அவர்? என்று கேட்டாள்.
அதற்கு ரவி திருவாளர் கரப்பான்பூச்சி அவர்கள்தான் என்றான்.
அவன் மனைவிககு புரியவில்லை. அவள் என்னது, உங்கள் பதிலெல்லாம் வினோதமாக இருக்கிறது. கடவுளை விட உயர்ந்தது தபால் பெட்டி என்கிறீர்கள். உங்களை விட உயர்ந்தது கரப்பான் பூச்சி என்கிறீர்கள். எப்படி? என்று கேட்டாள்.
இரு புரியும்படி சொல்கிறேன். நீ கட்டின புருஷன் எனக்கு பயப்படுவதில்லை. ஆனால் மிகச் சிறியதாக இருக்கும் கரப்பான் பூச்சிக்குத்தானே பயப்படுகிறாய். அதனால்தான் அது என்னைவிட உயர்ந்தது என்கிறேன்.
அவ்வளவுதான். அதைக்கேட்ட அவன் மனைவியின் கண்கள் கோபத்தால் சிவந்தது.
உடனே சமையல் அறைக்குச் சென்றாள். பூரிக்கட்டையை எடுத்து வந்து ரவியை அடிக்க கையை ஓங்கினாள். ரவி தப்பித்து வெளியே ஓடினாள்.
இந்த கதை வெளி வரும் வரை வீடு திரும்பவில்லை.
(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன். அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)
அன்பின் அணைப்பு
அதிகாலைத் தேநீராய்.. இதழ் பருகச் சுவையூறும்..!
பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு
நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!
தபால் பெட்டியும் கரப்பான் பூச்சியும்
கதை அல்ல நிஜம்.. ஏர்போர்ட்டில் என் மனதை உருக்கிய இரு காட்சிகள்!
கண்கள் மூடும் தூக்கத்தின் கனவில் கண்டேன் சிரிக்கிறாய்!
காஞ்சியின் பேரொளியே!
என் அன்பு அப்பாவிற்கு...!
{{comments.comment}}