- மஞ்சுளா தேவி
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தற்போது அதிலிருந்து 300 பேரை மீட்டு விட்டனர். ரயிலில் தவித்துக் கொண்டிருக்கும் 500 பேரை மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.
நெல்லையிலிருந்து கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் சிக்கிக் கொண்டது. ரயிலில் பயணிகளுடன் ரயில் பாதி வழியில் நின்று விட்டது. இறங்கி வெளியிலும் போக முடியாத அளவுக்கு வெள்ளக்காடாக இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அவர்களை மீட்க ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சாப்பாடு கூட கிடைக்காமல் பயணிகள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், 300 பயணிகள் மீட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 500 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரயில் தண்டவாளங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயிலை இயக்க முடியவில்லை. மேலும் ரயிலுக்கு வெளியே 10 அடிக்கு மேலாக நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 21 மணி நேரமாக சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு விமானப்படை மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}