சென்னை: சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் 10ம் வகுப்பு ரிசல்ட் பாக்க சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்நிலையில், சென்னை மதுரவாயல் பள்ளியில் படிக்கும் மாணவன் ஜீவா 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். ரிசல்ட்டையொட்டி தான் படித்து வரும் பள்ளிக்கு ரிசல்ட் பார்க்க ஆர்வமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது மதுவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.
இதில் ஜீவா விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ரிசல்ட் பார்க்காமலேயே மாணவன் ஜீவா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}