ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ. எஸ் 08 என்ற செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி டி- 3 என்ற ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.
புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.5 கிலோ ஆகும். இதில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதன் பணிக்காலம் ஓராண்டாகும்.

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை, எஸ்.எஸ்.எல்.வி- டி3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. இந்த செயற்கைகோள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணித்து புகைப்படம் எடுக்கும். மேலும் இது பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்றவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயாராக உள்ள இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}