கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை முட்டி வீசிய மாடு.. உயிர் போச்சுன்னா யார் பொறுப்பு?.. தந்தை ஆவேசம்

Apr 26, 2024,05:01 PM IST
சென்னை: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மக்கள் செல்வதற்கு வழியில்லாத வகையில் சாலை தோறும் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை விட மோசமாக மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தெருவில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி காயமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாடுகளால் சிறுவர்கள் மற்றும் முதியோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மாடுகளை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிப்பதில்லை. பால் கறக்க மட்டுமே அதைத் தேடுகிறார்கள். மற்ற நேரங்களில் தீனி கூட போடாமல் தெருவில் விட்டு விடுகிறார்கள். அவையும் பாவம் போக்கிடம் இல்லாமல் தெருக்களிலும், சாலைகளிலும் திரிகின்றன. இதில் சில மாடுகள் முட்டி பலர் காயமடைவது தொடர் கதையாகி  வருகிறது.



சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது 10 வயது மகள் கடைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த மாடு முட்டி தூக்கி விசியுள்ளது. இதில் காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், குழந்தையை கடைக்கு தான் அனுப்பினோம். குழந்தையின் எதிரே வந்த மாடு முட்டி தூக்கி வீசியது. காலையிலே மாட்டை அவிழ்து விட்டு  விடுகிறாங்க. தெருவில் அந்த மாடுகள் சுற்றித் திரிந்து வருது. அந்த மாடு இந்த ஏரியா மாடே கிடையாது. இந்த ஏரியாவுல யாரும் மாடு வளர்க்கல. பக்கத்து ஏரியா மாடு அது. இங்க பிள்ளைங்க நிறைய இருக்காங்க. என் பிள்ளைக்கு வந்த நிலை மத்த பிள்ளைகளுக்கு வந்தா. 

உயிர் போயிருச்சுனா என்னா செய்றது. இது யாரு மாடுனு கேட்டா என்னது இல்ல. உன்னது இல்லன்றாங்க. முட்டுனது எந்த மாடுன்னு கேட்குறாங்க. முட்டுன அந்த கருப்பு வெள்ள மாடயே இப்ப காணோம். இதற்கு முன்னாடி ஒரு வயதானவர் கூட மாடு முட்டி செத்தே போயிருக்காரு என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்