ஒரு ஐபிஎல் போட்டி கூட ஆடாத .. "சூப்பர் ஸ்டார் ஐபிஎல் வீரர்" இவர்தான்!

Jul 31, 2023,05:08 PM IST
லண்டன்: ஐபிஎல்லில் ஒருமுறை சேர்க்கப்பட்டும் கூட ஒரு போட்டியில் கூட விளையாடத சூப்பர் ஸ்டார் வீரர் யார் என்றால் அது ஸ்டூவர்ட் பிராடாகத்தான் இருக்க முடியும்.

இங்கிலாந்தின் மிகச் சிறந்த பந்து வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்டூவர்ட் பிராட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட்.


வலது கை வேகப் பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், 840 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடி வரும் ஸ்டூவர்ட் பிராட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில்லை. கடைசியாக 2016ம் ஆண்டுதான் அவர் ஒரு நாள் போட்டியில்ஆடினார். டெஸ்ட்டுக்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுப்பார். அவர் வீழ்த்திய 840 விக்கெட்டுகளில் 600 விக்கெட்டுகளுக்கும் மேலானவை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தவைதான்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது வீரராக இருப்பவர் ஸ்டூவர்ட் பிராட். 

ஒருமுறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டார் ஸ்டூவர்ட் பிராட்.  ஆனால் அவர் அத்தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. காரணம் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போய் விட்டது. அடுத்த ஆண்டு மீண்டும் அதே பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டார் பிராட். அப்போதும் அவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போய் விட்டது. அதன் பின்னர் அவர் ஐபிஎல்லுக்கே வரவில்லை.

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள பிராட் ஐபிஎல்லில் மட்டும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்