திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பர். திருப்பதி ஒரு வைணவ திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள முக்கிய கோவில் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோடை காலத்தில் இங்கு வரும் பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டள்ளன. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி இந்த மாதத் தொடக்கத்தில் கூறுகையில், கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல், கூல் பெயிண்டுகள், கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கின்றோம்.
நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். திருப்பதி ஏழுமலையான் கோவில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்திற்கு வரும் சாமானி பக்தர்களுக்கு முன்னரிமை அளிக்கப்படுகிறது. இதனால் கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடைகாலத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், 5 கிலோமீட்டர் தூரம் நின்று, 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}