சென்னை: கோடை விடுமுறையையொட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டுள்ள கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில்,
ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வாரம்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2ம் தேதி வரையிலும்
வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1வரையிலும்
ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்
ஞாயிறு அன்று இயக்கப்படும் நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்
திங்கள்கிழமை இயக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் சேவை மே 12 முதல் ஜூன் 2 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை
{{comments.comment}}