சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்பொழுது ஒரு முக்கிய அரசியல் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (BJP) விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் டூ பாஜக :
விஜயதரணி தமிழக அரசியலில் நன்கு அறியப்பட்ட ஒரு பெண் தலைவராவார். கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர்ந்து போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனினும், காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ பதவியைத் துறந்த கையோடு, புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். இவருடைய இந்த முடிவு அப்போது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

தவெகவில் புதிய பயணம் :
பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணிக்குத் தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரிய அளவிலான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அவருக்கு கட்சியில் பொறுப்போ, தேர்தலில் போட்டியிட சீட்டோ வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் பாஜகவிலிருந்து முழுமையாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளார்.
அதிமுக.,வில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள் தவெக.,வில் இணைந்துள்ள இந்தச் சூழலில், விஜயதரணி போன்ற அனுபவமிக்க ஒரு முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினர் தவெகவில் இணைவது கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாகக் கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் கட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்த விஜயதரணியின் வரவு தவெகவிற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயதரணி தவெகவில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து கட்சி மாறுவது குறித்த விவாதங்களும் இணையத்தில் நெட்டிசன்களால் எழுப்பப்பட்டு வருகின்றன. எது எப்படியாயினும், விஜயதரணியின் இந்த திடீர் அரசியல் அதிரடி மாற்றம், தமிழக அரசியல் கட்சிகளிடையே, குறிப்பாகப் பாஜக மற்றும் தவெக வட்டாரத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}