- ஸ்வர்ணலட்சுமி
உணவு பழக்கமும் பழமொழியும் என்ற தலைப்பில் இன்று பார்க்க இருப்பது "ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்" இதனை பற்றிய தகவல்களை பார்ப்போமா.
டர்க்கிபெரி (Turkey berry) என்று அழைக்கப்படும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரம். தக்காளி கத்தரிக்காய் போன்ற காய்கறிகளைப் போலவே சுண்டைக்காயும் தாவரங்களின் அதே குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.
"சுண்டை" இதன் காய்கள் சுண்டி விடும் தன்மை உடையதால் சுண்டைக்காய் என்கிற பெயர் வந்தது என்று கூறுவார்கள். சுண்டக்காய்க்கு வேறு பெயர்களும் உண்டு. மழைச்சுண்டை, கடுகி, அமரக்காய் என்பதாகும்.

மலைச் சுண்டைக்காய் அதிக கசப்பை கொண்டது. வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டை கசப்பு சிறிது குறைவாக இருக்கும். நஞ்சு சுண்டை, காட்டுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் இதனுள் உண்டு.
பலரும் விரும்பாத காய் சுண்டைக்காய் விளையாட்டாக ஒரு பழமொழி சொல்ல கேட்டிருப்போம் ..."சுண்டக்கா மாதிரி இருந்துட்டு என்ன வேலை செய்கிறான் பாரு" என்பதுதான். அதுதான் சுண்டைக்காய் சைஸ் சிறியதாக இருந்தாலும் அது தரும் நன்மைகளும் ஏராளம் ஏராளம்... தனித்துவமானதும் கூட.
சுண்டைக்காயின் அருமை பெருமைகளை பார்ப்போமா ... வற்றல் வகைகளில் அனைவரும் அறிந்தது சுண்டைக்காய் வற்றல் தான்.
அனைத்து விசேஷங்களில் ,திருமண விருந்துகளில், சைவ விருந்துகளில் வற்றல் குழம்பு பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டோ?....
சாம்பார் சாப்பிட்ட பின் வற்றல் குழம்பை ரசித்து ருசிப்பவர்கள் இன்றும் ஏராளம். சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .எலும்பு தேய்மானம் ,எலும்பின் உறுதி தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காய் சாப்பிடுங்கள் .சளியை போக்கும் தன்மை உள்ளது. எனவே பிஞ்சு சுண்டைக்காய் குழம்பு அல்லது துவையல் வைத்து சாப்பிட நன்மை பயக்கும்.
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது .மாதம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் அழிக்கப்பட்டு விடும்.
சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது .கல்லீரல் மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதன் கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் சர்க்கரை அளவை குறைக்கிறது .மூல நோய் உள்ளவர்கள் சுண்டைக்காயை நெயில் வதக்கி சாப்பிட மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும் .மூல நோயால் ஏற்படும் ரத்தக் கசிவு நீங்கிவிடும். உடல் சோர்வு ,மூட்டு வலி, போன்றவற்றிற்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.
வயிற்றுக்குள் குத்தாட்டம் போடும் குடற்புழுக்களை அழித்து செரிமான பகுதியை சுத்தம் செய்ய சுண்டைக்காய் மிகச்சிறந்தது. சுண்டைக்காயில் உள்ள பீனாள்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற உள்ளடக்கம் போன்றவை குடல் இரைப்பை அழற்சி சமயங்களில் வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவுகின்றது .இதனில் உள்ள நார் சத்துக்கள் உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது .இவை பசியை பராமரிக்கிறது. மேலும் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது வயிற்றுக் கோளாறு, வயிற்று மந்தம் போன்ற தொந்தரவுகளை சுண்டைக்காய் உட்கொள்ள நல்ல மருத்துவ பலனாக விளங்குகிறது.
"ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்" என்பதை பற்றி பார்த்தோம் இல்லையா ?..எனவே, கிடைக்கும்போது சுண்டைக்காயை தவறாமல் பயன்படுத்தி சமைத்து உட்கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக... மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}