கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டு அதிக அளவிலான வேலையிழப்பு இருக்கும் என்று ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார் அதன் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை. இதுதொடர்பான செய்தியை வெர்ஜ் இதழ் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயலாக்கத்தை எளிமையாக்கவும், சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்த லே ஆப் அவசியமாகிறது என்று சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அதிக அளவிலான லே ஆப்பில் கூகுள் ஈடுபடும் என்று ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுன்னணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கி விட்டன. இயந்திரமயமாக்கலும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே பலருக்கு வேலை போய்க் கொண்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த கூற்று, மேலும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதேசமயம், வேலை நீக்கம் என்பது கடந்த ஆண்டு போல அதிகமாக இருக்காது என்றும், எல்லாத் துறைகளிலும் கை வைக்க மாட்டோம் என்றும் சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இந்த இமெயிலில் உள்ள பிற தகவல்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அதேசமயம் கூகுள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அத்தனை பேரும் பீதியில் உறைந்துள்ளனராம்.
பார்க்கலாம் எத்தனை பேரின் வயிற்றில் கூகுள் மண்ணை அள்ளிப் போடப் போகிறது என்பதை.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}