சென்னை: தான் உடல் நலம் குணமடைய வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டு அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. தற்போது உடல்நலம் குணமடைந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பி உள்ளார்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதல்வர் மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் பல்துறை பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுத்துள்ள நன்றிச் செய்தியில், நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று மனதார வாழ்த்திய தமிழக எதிர்க்கட்சி தலைவர் நண்பர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.
இதேபோல பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர். என். ரவி, நடிகர் அமிதாப் பச்சன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். மேற்கண்ட தலைவர்களுக்கு தனித் தனியாக நன்றி தெரிவித்து்ள ரஜினிகாந்த், இதுதவிர தன்னை வாழ்த்தி தனக்காக பிரார்த்தித்த மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!
ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
{{comments.comment}}