சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள், திரையுலகினருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இதில் இருவருக்கும் மட்டும் அவர் கொடுத்த அடைமொழிதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
டிசம்பர் 12ம் தேதி வருடா வருடம் ரஜினி தினமாக, ஸ்டைல் தினமாக ரஜினிகாந்த்தின் ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கமானதுதான். அன்றுதான் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளாகும். அந்த வகையில் நேற்றும் ரஜினி ரசிகர்கள், அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர்.
பிறந்த நாளையொட்டி தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு இன்று நன்றி தெரிவிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு தனித் தனியாக நன்றி தெரிவித்து டிவீட் போட்டுள்ளார் ரஜினிகாந்த்.
மற்றவர்களுக்கு மொத்தமாக பெயர்களைக் குறிப்பிட்டு தனி அறிக்கையாக நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதில் ஹைலைட்டாக பலருக்கும் தெரிந்தது இரண்டு பேருக்கு அவர் கொடுத்த அடைமொழிதான். அது யார் தெரியுமா.. துணை முதல்வர் உதயநிதி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்தான் அந்த இருவரும்.
இருவரையும் அன்புத் தம்பி என்று விளித்து பாசத்துடன் நன்றி கூறியுள்ளார் ரஜினிகாந்த். மற்றவர்களுக்கு அவர்களது பதவி மற்றும் திரு போன்ற சம்பிரதாயமான சொற்களைத்தான் ரஜினி பயன்படுத்தியுள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய்க்கு அன்புத் தம்பி என்று கூடுதலாக பாசம் காட்டியுள்ளார். இதை திமுகவினரும், தவெகவினரும் மகிழ்ச்சியுடன் பரிமாறி வருகின்றனர்.
உதயநிதியும், விஜய்யும்தான் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் சக்திகளாக இருப்பார்கள் என்பதை ரஜினிகாந்த் உணர்ந்துள்ளதாகவும், அதனால்தான் அந்த இருவரையும் ஒரே மாதிரி அன்பு காட்டி அழைத்திருப்பதாகவும் சிலர் டிகோட் செய்து பேசி வருகின்றனர்.
ஆக மொத்தம் ரஜினிகாந்த் எது செய்தாலும் அல்லது எதுவுமே செய்யாவிட்டாலும் கூட அது பேசு பொருளாகி விடுகிறது!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}