சென்னை: 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் காலை வெளியானது.இதில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,17,261 பேரும்,11ம் வகுப்பில் 7,43,232 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பாக துணைத் தேர்வு நடத்தப்படும். அந்த துணை தேர்வு குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10,11ம் வகுப்பில் துணைத் தேர்வுக்கு வருகின்ற மே 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 4-10ம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 4-11ம் தேதி வரையும் துணைத் தேர்வுகுள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 4ம் தேதி துவங்கி ஜூலை 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.
ஜூலை 4 (வெள்ளி) : தமிழ்மொழி மற்றும் இதர மொழிகள்
ஜூலை 5 (சனி): தேர்வுத் தேர்ந்தெடுக்கக்கூடிய மொழி
ஜூலை 7 (திங்கள்): ஆங்கிலம்
ஜூலை 8 (செவ்வாய்) : கணிதம்
ஜூலை 9 (புதன்) : அறிவியல்
ஜூலை 10 (வியாழன்) : சமூக அறிவியல்
11ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 4ம் தேதி துவங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.
ஜூலை 4 (வெள்ளி) : தமிழ்மொழி மற்றும் இதர மொழிகள்
ஜூலை 5 (சனி): ஆங்கிலம்
ஜூலை 7 (திங்கள்): உயிரியல், தாவரவியல்,வரலாறு, வணிகக் கணிதம், அடிப்படை பொறியியல் பாடங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை
ஜூலை 8 (செவ்வாய்) : இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்
ஜூலை 9 (புதன்) : தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணிணி, உயிர்வேதியியல், மேம்பட்ட தமிழ், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியிய
ஜூலை 10 (வியாழன்) : சமூக அறிவியல், தொழில்வழி நர்சிங், மின்சார பொறியியல்
ஜூலை 11 (வெள்ளி) : கணிதம், உயிரியல் ஆய்வு, வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, ஆடைகள் வடிவமைப்பு, உணவுசேவை, வேளாண் அறிவியல், பொதுநல நர்சிங்.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}