சென்னை: சூர்யா 45 வது திரைப்படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் விலகியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அறிவிப்பையு படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கர் புதிய இசையமைப்பாளராக வந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சவுண்ட் எபெக்ட் மைனஸ் ஆனதால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45 ஆவது படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.

நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 வது திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. லப்பர் பந்து படத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டு பெற்ற நடிகை ஸ்வாஸிகா இப்படத்தில் நடிக்கிறார். அதேபோல் பிகில், மெர்சல் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவு செய்த ஜிகே விஷ்ணு இப்படத்தில் ஒளிப்பதிவை கையாளுகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சொந்த காரணங்களுக்காக ஏ ஆர் ரகுமான் சூர்யா 45 வது திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏ ஆர் ரகுமான் விலகியது குறித்து முறையான காரணங்கள் வெளியாகவில்லை. ஆனால் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு ஏ ஆர் ரகுமான் சிறிது காலம் இசையமைப்பிலிருந்து விலக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே சூர்யா நடிக்கும் பெயரிடாத படமான சூர்யா 45 வது படத்தின் பட பூஜை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 45 வது படத்தில் ஏ ஆர் ரகுமான் விலகியதைத் தொடர்ந்து சூர்யா 45 வது படத்தில் யார் இசையமைக்கிறார் என்பது தொடர்பான அறிவிப்பை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தில் சூர்யா 45 வது படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாய் அபயங்கருக்கு இது 2வது படமாகும். இதற்கு முன்பு பென்ஸ் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர், 3 ஆல்பங்களில் பாடியுள்ளார். இப்போதுதான் அவருக்கு மிகப் பெரிய நடிகரின் படம் கிடைத்துள்ளது. சரி, சாய் அபயங்கர் யார் தெரியுமா.. பின்னணிப் பாடகர்களான திப்பு - ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 20 வயதுதான் ஆகிறது சாய்க்கு. சூர்யா படத்தின் மூலம் அவர் இன்னொரு அனிருத்தாக அதிரடி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}