மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி நாளான இன்று கரடியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே 1% க்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பேரிடியைக் கொடுத்துள்ளன.
சென்செக்ஸ் 961.42 புள்ளிகள் (1.17%) சரிந்து 81,287.19 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி: 317.90 புள்ளிகள் (1.25%) வீழ்ச்சியடைந்து 25,178.65 என்ற நிலையில் முடிவடைந்தது.

அமெரிக்காவின் என்விடியா (Nvidia) நிறுவனப் பங்குகள் 5% சரிந்தது, உலக அளவில் தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது இந்திய ஐடி பங்குகளையும் (IT Stocks) விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியச் சந்தையிலிருந்து தொடர்ந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாதது மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹90.97 என்ற அளவிற்குச் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலும், அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமுமே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம். வரப்போகும் வாரங்களில் சந்தை மீண்டு வர உலகளாவிய காரணிகள் சாதகமாக இருக்க வேண்டும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}