டில்லி : 2024ம் ஆண்டில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதி நிகழ உள்ளது. இது எந்த நேரத்தில் நிகழ உள்ளது? இந்தியாவில் இதை பார்க்க முடியுமா? என்பதை பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கு இடையே சந்திரன் கடக்கும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். ஆனால் இதனால் சூரியன் முழுவதுமாக மறைந்து விடாது. ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தில் சூரியன் தெரியும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது உண்டு.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08ம் தேதி நிகழ்ந்த நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதியான நாளை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 02ம் தேதி இரவு 09.13 மணிக்கு துவங்கி, அக்டோபர் 03.ம் தேதி அதிகாலை 03.17 வரை இந்த கிரகணம் நீடிக்கும். கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் உச்சபட்ச கிரகண நேரமாக சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனை பார்க்க முடியாது. இந்தியாவின் எந்த பகுதியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.
அதே சமயம் தெற்கு அமெரிக்கா, குறிப்பாக சிலி, அர்ஜெண்டினா, பசிபிக் பெருங்கடல், பெரு, ஃபிஜி, பிரேசில், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இந்த சூரிய கிரகணம் 93 சதவீதம் சூரியனை மறைக்கும் நிகழ்வாக நிகழும் என சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும், மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காண முடியும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நிசமான பொங்கல்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
{{comments.comment}}