செல்வத்தை வாரி வழங்கும்.. ஸ்வர்ணாகர்ஷண பைரவர்!

Feb 26, 2026,11:32 AM IST

- ஸ்வர்ணலட்சுமி

 

சிவபெருமானின்  சாந்தமான மற்றும் சக்தி வாய்ந்த, செல்வத்தை வாரி வழங்கும் வடிவமாக கருதப்படுபவர் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.


"ஸ்வர்ணம்" என்றால் தங்கம், " ஆகார்ஷணம்"  என்றால் ஈர்த்தல். இவரை வழிபடுவதன் மூலம் செல்வம், தங்கம் மற்றும் பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது ஐதீகம். ஐஸ்வர்யத்தை அள்ளித் தருவார்.

 

ஸ்வர்ணாகர்ஷண   பைரவர் தோற்றம்:




இவர் 64 பைரவ வடிவங்களில் மிக முக்கிய தலைமை பைரவராக கருதப்படுகிறார். இவர் கையில் அக்ஷய பாத்திரத்தை ஏந்தி ஒரு கையில் செல்வத்தை வாரி வழங்கும் முத்திரையுடன் காட்சியளிப்பவர்.இவரின் இடதுபுறம் லட்சுமிதேவி மறுபுறம் குபேரனும் வழிபாட்டு நிலையில் இருப்பர்.


செல்வங்களுக்கு அதிபதி:


இவர் செல்வத்தின் அதிபதி.வறுமையை நீக்கி, அளவில்லாத செல்வத்தையும், யோகத்தையும் அளிக்க கூடியவர். இவரை வழிபட வளமான வாழ்க்கை  தந்தருள்வார் . அஷ்ட ஐஸ்வர்யங்களும், தங்கம், வீடு,வாகனம் சேரும். தேய்பிறை அஷ்டமி,ராகு காலத்தில் வரும் சனி ஹோரை ஆகியவை பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நேரங்கள்.


சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் பெரும்பாலான சிவன் கோவில்களில் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.

 

ஜோதிடத்தில் ராகு பகவானுக்கு அதிபதியாக பைரவர் இருப்பதால் ராகு தோஷம் இருப்பவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமை சனி ஹோரையில் வழிபாடு செய்வதால் சனி மற்றும் ராகு தோஷங்கள் நீங்கும். அஷ்டமி நாட்கள் மட்டுமல்லாமல் தினமும் ஸ்வர்ணா கர்ஷண  பைரவரை வணங்குவது பொருளாதார ரீதியான பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்கும்.


வழிபாடுகள்& பலன்கள்:


புதன்கிழமைகள் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை தரிசித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.தொடர்ந்து ஐந்து புதன் கிழமைகள் இவரை தரிசித்து கற்கண்டு படைத்து வழிபட பண வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை .

 

நிவேதனம்: ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிவப்பு நிற மலர்கள் குறிப்பாக செவ்வரளி மலர்கள்  மாலை, வடை, தயிர் சாதம், பால்,நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

பலன்கள்:


தீராத கடன் பிரச்சினைகள், வீடு கட்ட, தொழில் துவங்க லோன் வாங்கி வட்டி கட்ட இயலாமல் பணப்பிரச்சனைகள் அதிகமாக இருப்பவர்கள் இவரை சரணடைய படிப்படியாக கஷ்டங்கள் அனைத்தும் தீரும். விபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.


தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். கடன் தொந்தரவுகள் தீரும். தங்கம் மற்றும் பொருள் சேர்க்கை உண்டாகும்.  பைரவரை வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும். மன அமைதி பெருகும். பயம் நீங்கி மன உறுதி கூடும். தொழில் ரீதியான போட்டி, பொறாமை அதிகம் இருப்பவர்கள் இவரை வழிபடுவது அவசியம்.

 

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் :

 

"தனம் தரும் வயி ரவன்  தளிரடி பணிந் திடின்   தளர்வுகள் தீர்ந்துவிடும் மனம் திறந்தவன்  பதம் மலரிட்டு வாழ்ந்திடின் மகிழ்வுகள் வந்துவிடும்" எனும் ஸ்வர்ணா கர்ஷண பைரவர் அஷ்டகம் படிப்பது வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று தரும்..


செல்வம் பெருகும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம் :  "ஓம் நமோ பகவதே ஸ்வர்ணா கர்ஷண  பைரவாய தன  தான்ய   விருத்திகராய சீக்ரம் ஸ்வர்ணம்  தேஹி தேஹி    வஸ்யம் குருகுரு ஸ்வாஹா ".


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்