- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஆந்திர மக்களின் சூப்பரான உணவு வகைகளில் இந்த கோங்கூராவும் ஒன்று. நாக்கில் அது பட்டாலே செம டேஸ்ட்டாக மட்டுமல்ல சூப்பர் காரமாகவும் இருக்கும். ஆனால் அதை அடிச்சுக்க ஒரு சைட் டிஷ் கிடையவே கிடையாதுங்க.
அப்படிப்பட்ட கோங்கூரா தொக்கு செய்வதைத்தான் இப்ப பார்க்கப் போறோம். புளிச்ச கீரைதான் இந்த கோங்கூராவின் முக்கிய ஐட்டம். சரி வாங்க எப்படி பண்றதுன்னு கிச்சனுக்குள்ள போய் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

1. புளிச்சகீரை - 1 கட்டு (இலைகளை கழுவி எடுத்துக் கொள்ளவும்)
2. பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 6
3. சீரகம் - 1 ஸ்பூன்
4. வர மிளகாய் - 4
5. நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
6. தக்காளி - 1 (புளி தேவைப்பட்டால் சேர்க்கலாம்)
7. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
8. கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க 1/4 ஸ்பூன்
(உப்பு, புளி, காரம், தேவைக்கும், விருபப்த்திற்கும் ஏற்ப)
செய்முறை :
1. அடி கனமான கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், கீரை, சீரகம் (புளிள தேவைப்பட்டால் சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. கீரை வெந்த உடன் இறக்கி, ஆற விட்டு, பிறகு மிக்ஸியில் பல்ஸ் மோடில் போட்டு அரைக்க வேண்டும்.
3. அதே கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தட்டி போடவும்.
4. வெந்தயம் சேர்த்து பொன்னிறமானதும் அரைத்த கீரையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சிம்மில் வைத்து கிளறி விடவும்.
புளிச்சக்கீரை வாசனை மூக்கினை துளைக்கும். இதை சூடான சாதத்துடன் எண்ணெய் விட்டு கலந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட்.
புளிச்சக்கீரை - அப்பா...பெயரே புளிப்பு சுவையுடன் நாவில் நீர் வர வைக்கிறது. இதை பலரும் உணவில் சேர்க்காமல் ஒதுக்குவதுண்டு. ஆனால் இது ரத்த சோகை நோயைத் தடுக்கும் ஆற்றல் மிக்கது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதனை உணவில் சேர்ப்பதால் சருமம், முடி பாதுகாப்பிற்கு காரணமான ஃப்ரீரேடிக்கல்களைத் தடுக்கும்.
இதில் பச்சைத் தண்டு, சிவப்பு தண்டு என 2 வகை உண்டு. சிவப்பு தண்டு அதீத சுவை மிக்கதாகும். இது கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், வேலைக்கு செல்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அல்டிமேட் டிஷ்...
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}