- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: 3 பருப்புகளைக் கலந்து செய்யும் தோசைதான் இந்த முப்பருப்பு தோசை. முப்பருப்பு தோசை புரதச்சத்து மிக்கது. மிக மிக சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. ஆரோக்கிய சமையல் -ஆரோக்கிய சாப்பாட்டை விரும்புவோர் கண்டிப்பாக தங்களுடைய மெனுவில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒரு உணவு இந்த முப்பருப்பு தோசை.
சரி வாங்க இதை எப்படி பண்றது அப்படின்னு பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப்
இட்லி அரிசி - அரை கப்
பச்சரிசி - அரை கப் (இரண்டும் சேர்த்து ஒரு கப் அளவிற்கு எடுக்கவும்)
சீரகம் - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
வெந்தயம், உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் பிளஸ் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1 பெரியது (பொடியாக கட் செய்யவும்)
பூண்டு + இஞ்சி - ஆறு பல் பிளஸ் சிறிது
உப்பு காரம் - தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப
இனி செய்முறை
1. மூன்று பருப்பு, இரண்டு அரிசி, வெந்தயம், இஞ்சி, உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், வரமிளகாய், பூண்டு விருப்பத்திற்கு போடலாம் போடாமலும் செய்யலாம்.
2. இவை அனைத்தும் 3 மணி நேரம் ஊற வைக்கவும் (நன்றாக கழுவிய பிறகு)
3. மிக்ஸியில் நன்றாக ஊறிய தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு நைசாக அரைக்கவும்.
4. உப்பு சேர்த்து பெருங்காயம் மல்லித்தழை கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும். அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
5. பிறகு தோசை கல்லில் மெலிதாக ஊற்றி எண்ணெய் விட்டு கிரிஸ்பியான தோசை வார்க்கவும்.
சூப்பரான சுவையான இந்த தோசைக்கு வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்டிமேட் டெஸ்ட் கொடுக்கும். பிரேக்ஃபாஸ்ட், டின்னருக்கு இது ஒரு டேஸ்டியான தோசையாக இருக்கும். பேச்சலர்ஸ், தனிக்குடித்தனம் நடத்தும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். புரதச்சத்து அதிகம் உள்ள கிறிஸ்பியான இந்த தோசை டயாபடீஸ் பேஷண்டுகளுக்கு நல்ல filling ஆன உணவு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}