- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: பப்பு சாதம் எல்லோரும் சாப்பிட்டிருப்போம் குட்டீஸ்களாக இருக்கும்போது.. அப்பெல்லாம் என்ன சேட்டை செஞ்சோமோ.. இப்ப நம்ம குட்டீஸ் எல்லாம் நம்மை பாடாய்ப்படுத்துதுக என்று பலரும் புலம்புவதைப் பார்க்கலாம். சுவையா செஞ்சு கொடுத்தா.. ஏன் படுத்தப் போறாங்க சிஸ்டர்ஸ்.. !
இந்த சுரைக்காயை வச்சு சூப்பரா ஒரு டிஷ் பண்ணலாம். அதை மட்டும் செஞ்சு கொடுத்துப் பாருங்க.. உங்க வீட்டுல உள்ள எல்லாருமே உங்களுக்கு விசிறிகள் ஆய்ருவாங்க.. அப்படி ஒரு பப்பு சாதத்தைப் பத்தித்தான் இப்பப் பார்க்கப் போறோம்.
வாங்க கிச்சனுக்கு ஓடலாம்.

தேவையான பொருட்கள் :
1. சுரைக்காய் - 1 (தோல் சீவி கட் செய்து எடுத்துக் கொள்ளவும்)
2. துவரம் பருப்பு - 1 சிறிய கப்
3. பாசிப்பருப்பு - 1 சிறிய கப்
4. சீரகம், பெருங்காயம் - 1 ஸ்பூன்
5. வரமிளகாய் - 6
6. கறிவேப்பிலை, மல்லித்தழை - 1 கைப்பிடி
7. பூண்டு - 6 பல்
8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
9. வெங்காயம் - 1 பெரியது (பொடியாக நறுக்கியது)
10. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
11. கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க (1/2 ஸ்பூன்)
12. தக்காளி - 2
13. புளி - 1/2 நெல்லி சைஸ்
உப்பு, புளி, காரம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப
செய்முறை :
1. துவரம் பருப்பு + பாசிப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி விட்டு, குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி, நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன்+ மஞ்சள் தூள் + சீரகம் + தக்காளி + புளி + பூண்டு ஆகியவற்றை சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து, மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், சுரைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு அதோடு சாம்பார் பொடி, சிறிது தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும்.
3. சுரைக்காயுடன் 3 வரமிளகாய் சேர்த்து, சுரைக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
4. பிறகு வேக வைத்து, மசித்து வைத்துள்ள பருப்பை அதில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
5. மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு+ உளுந்தம் பருப்பு + கறிவேப்பிலை+ வரமிளகாய்+ சீரகம், தட்டி வைத்த பூண்டு, வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
6. இந்த தாளிப்பை கொதிக்கும் சுரைக்காய், பருப்பு கலவையில் சேர்த்து, சிறிது கொதிக்க விட்டு, மல்லித்தரை தூவி இறக்கினால் கெட்டி பருப்பு சுரைக்காய் ரெடி. மணக்கும் கெட்டி பருப்பு சுரைக்காய் சாதம், இட்லி, தோசைக்கு செம சைட் டிஷ்.
சுரைக்காய்க்கு உப்பு இல்லை என கிண்டலாக சொல்வார்கள். ஆனால் கிண்டல் வார்த்தை இல்லை. மருத்துவ குறிப்பு என்பது பலருக்கும் தெரியாது. உண்மைதாங்க. உணவில் சுரைக்காய் சேர்த்துக் கொண்டால் உடலில் உப்பின் அளவு குறையும். குழந்தைகளுக்கு நெய் சேர்த்து இதை கொடுக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமையான உணவு. பருப்பில் புரத சத்து உள்ளதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு. குறைவாக சாப்பிட்டால் கூட வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}