புறநானுற்றில் வெளிப்படும் உளநலசிக்கல்கள்!

Mar 07, 2026,05:00 PM IST

- முனைவர் வி.புவனேஸ்வரி, உதவிப் பேராசிரியர்


‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்” என்றார் திருவள்ளுவர். உளநலத்தைப் பேணி பாதுகாத்தல் எளிய செயலன்று டாக்டர் மு.வரதராசன் உள்ளத்தின் தேவைகளே வளர்க்கின்றன. நலமான உள்ளம் பெற்ற மனிதன் தன்னுள் நிறைவும் ஒத்திசையும் பெற்றிருப்பான். உளவியலார் ‘உள்ளும் புறமும் ஒத்து வாழ்வதே நல்ல ஆளுமையாகும்" என்பர்². உளவியல் சிக்கலை மூவகைப்படுத்துவர். ஆவையாவன

  உள்ள முறிவு

  உள்ளப் போராட்டம்

  உள்ள இறுக்கம்


சங்க இலக்கியத்தில் உள்ளம் முறிந்து இறுக்கம் உற்றுத் தவிக்கும் சூழல்கள் பல இடம் பெற்றன.


உள்ள முறிவு




உள்ள முறிவு என்பது விரும்பிய இலக்கினை அடைவதில் நேரும் தடைகளாலே, குறுக்கீடுகளாலே நேரிதான குறிக்கோள் ஒன்று இன்மையாலோ விளைவதாகும் என்று டாக்டர் சிவராஜ் தன்னுடைய நூலில் எதனை வரையறை செய்துள்ளார். எண்ணிய எண்ணியாங்கு எய்த இயலாத நிலையில் உள்ள முறிவு ஏற்படுகிறது எனலாம். இத்தைய உள்ள முறிவுகள் அவை நிகழும் இடங்களுக்கு ஏற்ப சில வகைகளாகவும் பகுக்கப்படுகின்றன. அவையாவன,


  வாழ்வியல்புகளில் ஏற்படும் உள்ள முறிவு

  எளிய முறிவுகள்

  சூழ்நிலை தடைகள் சார்ந்த உள்ள முறிவுகள்

  உடல்-உள்ள குறைகள் சார்ந்தவை 

  சமூக நிலை சார்ந்த உள்ள முறிவு

என வகைப்படுத்தப் படுகின்றன.


வாழ்வியல்புகளில் ஏற்படும் உள்ள முறிவு


இன்பமும், துன்பமும் விரவிய நிலையே வாழ்வியல்பாக உள்ளமையை காண்கிறோம். மனிதனின் தேவைகளும்> வேட்கைகளும் உடனடியாக நிறைவேர விடுமானால் வாழ்க்கை எளிமையாகிவிடும். எண்ணம் பழுதானால் ஏக்கம் வருகின்றது. உள்ளம் உடைக்கின்றது. இதனை> புறநானுற்றில் கோப்பெருந்சோழன் கூறுவதைப் போல


‘நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னேர்க்குச்”

(கோப்பெருந்சோழன் புறம் 214:4-5)


என்று கூறுகிறார். அதாவது யானை வேட்டைக்குச் செல்வோன் யானையை அடைதலும் உண்டு. சிறிய பறவை வேட்டைக்குச் செல்பவன் ஒன்றையும் பிடிக்காமல் வெறுங்கையோடு திரும்பி வருதலும் உண்டு. அறவினைகளைச் செய்யலாமா? செய்ய கூடாதா என மயங்குவோர் தெளிவு இல்லாத அழுங்கு நெஞ்சினர் என்கின்றார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உயர்வாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் உள்ளும் எண்ணங்கள் சொர்க்கம் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் உள்ள முறிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. நல்வினைகள் செய்தால் சொர்க்கம் கிடைக்கும். இல்லையேல் கிடைக்காமலும் போகலாம். இமயமலை எப்படி பல் நல்வினைகளைச் செய்து உயர்ந்து நிற்கிறதோ, அதை போல வாழ்வில் மனச்சோர்வு ஏறி உயர்நிலை அடைய எண்ணங்கள் வலிமையுடையதாக இருந்தால் உள்ள முறிவு என்ற நிலை கோப்பெருந்சோழனின் இப்பாடல் உள்ள உயர்வு உணர்த்தும் ஏற்படாது என பாடலாக அமைகிறது.


இதனையே உளவியலாளர்கள் மனமே அடிப்படை என்று கூறுகின்றனர். நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகாவே ஆகிறோம். புறநானூற்றுப் பாடல்கள் வாழ்க்கைப் போராட்டங்கள்> இடர்ப்பாடுகள் அவற்றை ஆட்கொண்ட விதம் ஆகியவற்றில் மிகச் சிறந்த உளநலச்சிக்கலை எடுத்துரைக்கும் பாடலாக அமைவதைக் காணலாம். அதில் கோப்பெருந்சோழன் புறம் என்ற பாடல் உள்ள முறிவு அடிப்படை காரணமான எண்ணம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.


பொதுவாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்களிடையே எண்ணங்கள் பழுதடைந்தே காணப்படுகின்றன. இவர்கள் மனத்தளவில் பலவீனமானார்கள் அவர்கள் மனதை உற்சாகமாக மாற்றி கொண்டால் மட்டுமே எதிர்மறையான எண்ணங்களில் இருந்து வெளியேற முடியும். தாழ்வு மனப்பான்மை எண்ணம் பழுதடைந்தவர்களிடையே அதிகம். எண்ணங்களில் பல்வேறு குழப்பங்கள் உள்ளவர்கள் திரும்ப திரும்ப மனதுக்குள் நுழையும் தேவையற்ற சிந்தனை மற்றும் செயல் கட்டுப்படுத்த முயன்றும் அவர்களால் இயலாமல் போவதுண்டு. இத்தகைய எண்ணங்களே பின்னாளில் மன அழுத்தம் என்கிற நிலைக்கு உள்ளாகிறது என்பார் உளவியலாளர்.

இதனையே திருவள்ளுவர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார். எண்ணங்களே நம் உயர்வுக்கு வலிமை சேர்க்கும். நல்வினை நாளும் செய்ய வேண்டும். இதை தான் உளவியலாளர்கள் எதிர்மறை எண்ணங்களிருந்து விடுபட சில சிகிச்சை முறைகளையும் கூறுகின்றனர்.


மனப்பாரங்களைப் பகிர்வது அவசியம் நேரத்தைப் பகிர்ந்து செலவிடக் கற்றுக் கொள்ளவது பலன் தரும். புத்தகங்களை வாசிப்பதும் இசைக்கருவிகளை வாசிப்பதும் மனம் புத்துணர்வுடன் இருக்க எளிய வழியாகும். மிதமான உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். சில நேரங்களில் மருத்துவர்களின் எடுத்துக் ஆலோசனைகளையும் கொள்வது நல்லது. உளநலச்சிக்கல் ஏற்படுவதற்கு முதல் அடிப்படைக் காரணம்எண்ணமே. எண்ணத்தில் தெளிவு உயர்வு வேண்டும் என்பதையே புறநானுற்று கோப்பெருந்சோழன் புறம் உளநலத்தின் முதன்மைக் காரணத்தை வெளிப்படுத்துகின்றது. 


எளிய உள்ள முறிவுகள்


வாழ்க்கை எப்போதும் சிக்கல் நிரம்பிய பெரும்பாடாகவும் இருப்பதில்லை. அன்றாட நடைமுறை வாழ்வில் மனிதனுக்கு நேரும் நெருக்கடிகள் பெரும்பாலும் சிற்றியலானவையும் எளிமையாகவும் உள்ளன. இவற்றை மனித மனம் எவ்வாறு அணுகுகிறது என்பதையே உளவியலாளர்கள் உணர்த்தியுள்ளனர்.


புறநானுற்றில் இருக்கும் சில பாடல்கள் எளிய உள்ள முறிவினை பறைசாற்றுகின்றன. இதனை


‘பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து 

பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப் 

பழனுடையப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றும் 

பெறாது பெயரும் புள்ளினம் போல"

(பெருந்தலைச் சாத்தனார் புறம் 209 :7-10)


என மூவன் என்னும் அரசன் பரிசில் தர நீட்டித்தபோது புலவனின் மனதில் ஏற்படும் எளிய மன முறிவினை விளக்கும் பாடலாக அமைந்துள்ளது. பழங்களை விரும்பி நெடுந்தூரம் பறந்து சென்ற பறவைகள் மரம் பழமற்று இருப்பதைக் கண்டு வருந்தித் திரும்புவது போல உன்னைக் காண வந்த நானும் பரிசில் பெறாது திரும்புவேன் என பரிசில் தர மன்னன் காலம் நீட்டித்தவிடத்து புலவனின் மனதில் ஏற்படும் எளிய மணமுறிவினை இப்பாடல் வலியுறுத்துகிறது. மன ஓட்டத்தில் ஏற்படும் ஒரு சில சூழல்கள் தனக்கு சாதகமாக அமையாதவிடத்து இத்தகைய எண்ணங்கள் ஏற்படவாய்ப்புகள் உள்ளதாக உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 


மேலே காட்டிய விருப்பங்கள் எளிய நிலையை விளக்குவனவாகும். நிலையான துன்பத்தையோ நீடிக்கும் துன்பத்தையோ நல்குவன அல்ல எளிய விருப்பங்கள் ஈடேற நிலையில் அச்சம் ஆசை இவ்வாறாக தோற்றம் எளிய உள்ள முறிவுகளை இருநிலைகளாகப் பிரிக்கலாம். அவையாவன


  அகமுகம்

  புறமுகம்

என்பனவாகும். இவ்வாறாக மனநிலையைப் பிரிப்பது உளவியலாளர்கள் பின்பற்றும் ஒரு வகை உளவியல் கொள்கையாகும்.


இன்றைய வளர் இளம் பருவத்தினரிடையே இத்தகைய எளிய உள்ள முறிவுகள் மண்டிக்கிடப்பதை நம்மால் அறிய முடிகிறது. நண்பர்கள் பெற்றோர்கள் தரும் சுதந்திரம் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு மற்றவர்களிடம் அனுசரித்துப் போவதில் உள்ள மாற்றங்கள் சமூக வலைத்தளங்களின் தாக்கம், சினிமா தாக்கம் முதலியவற்றை மனம் சார்ந்த எண்ணங்கள் பழுந்தடைந்து எளிய மன முறிவு ஏற்பட காரணமாக அமையும்.


இத்தகைய காரணிகள் பின்னாளில் ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தி தருவதற்கான சந்தர்ப்பங்களாக விளைகின்றன. இத்தகைய நிலையிலிருந்து வெளிவர வெளிப்படைத்தன்மையே உதவும் என உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் பெற்றோரின் அரவணைப்பு இன்றியமையாதது. பெற்றோரின் பிள்ளைகள் உறவின் தரம் எளியதாக இருக்கும் நிலையில் இத்தகைய சவால்களை எளிதில் எதிர் கொண்டு விடுவார்கள். மனதில் ஏற்படும் எளிய முறிவு கூட உளநலத்தைப் பாதிக்கும் காரணியாக புறநானூற்று காலம் தொடங்கி இன்று வரை பயணிக்கிறது. மன அமைதி மன கட்டுப்பாடு நிம்மதியான வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.


சூழ்நிலை தடைகள் சார்ந்த உள்ள முறிவு


சூழ்நிலை தடைகள் என்பன பருப்பொருள் இயலானதும் சமூக இயலானதும் என பல்வகை தடைகள் குறிக்கின்றன. நிலநடுக்கம், பெருந்தீ பெரும் பஞ்சம் விபத்து அன்பிற்குரியவர்களின் மரணம் முதலியவை சூழ்நிலைத் தடைகளின் வலிமையை புறநானுறு ஐயூர் முடவனாரின் பாடல் மூலம் நாம் அறியலாம். 


‘நீர்மிகின் சிறையும் இல்லை தீமிகின்

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை

வளிமிகின் வலியும் இல்லை ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி”

(ஐயூர் முடவனார் புறம் 51: 1-3)


நீர் மிகுந்த வெள்ளமானால் அதனைத் தடுத்தல் இயலாது. நெருப்பு மிகுந்தால் உயிர்களைக் காக்கும் நிழலும் இல்லை. காற்று மிகுந்தால் அதனை பொறுக்கும் வலிமை யாருக்கும் இல்லை. ஆகையால் வெள்ளம் புயல் மழையின்மை ஆகிய இயற்கைக் கேடுகள் உள்ளத்தைச் சிதைக்கின்றன என்று புறநானுற்றுப் புலவன் இயற்கைச் சீற்றம் கூடஉள்ளத்தை இடர்க்குள்ளாக்குகிறது என்ற மனநிலையை இதில் வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்று பரணரும் நற்றிணையில் கூறபட்டுள்ளது ஆராயத்தக்கதாக உள்ளது.


‘கல்பொரு திடிப்பினும் கதழுரை சுடுகினும் 

உறுமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும் 

பெருநிலங் கிளரினும்”

என்று காற்று மோதலும் பெருமழை இடியேறித்தாலும் நிலம் கீழ்மேலாதலும் தொடர்ந்து பெய்யும் பெருமழையால் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வேறிடம் செல்லும்போது நேரும் கலக்கத்தை, அவர்களின் மன உணர்வுகளை இப்பாடலின் வாயிலாக அறியலாம். சூழ்நிலை தடைகள் மனத்தினை எவ்வாறெல்லாம் வருத்தற்கு ஆளாக்குகின்றன என்பதை புறநானுற்றுப் பாடல் வழியும் பரணரின் சொற்கூற்று வழியும் நம்மால் அறிய முடிகின்றது.


சூழ்நிலைத் தடைகள் சார்ந்த  மன உணர்வுகள் வளர் இளம் பருவத்தினரிடையே பெருவாரியாகக் காணப்படுகின்றன. இக்கட்டான சூழ்நிலைகள் தைரியமானவர்கள் கூடச் சில நேரம் தடுமாறக்கூடும். தற்கொலையே சிறந்த முடிவு என்று வளர் இளம் பருவத்தினரைத் தவறான பாதைக்கு தள்ளுவதுண்டு. திடீரென்று தென்று மனவெழுச்சிகளே எதற்கு காரணமாக அமைகின்றன. மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் உலகப் பிரச்சனைகளிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும் வீட்டிலுள்ளவரை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துகின்றனர். 


படிப்பில் மந்தம் தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை தேர்வுகளில் அடிக்கடி தோல்வி போதை பொருட்கள் பயன்பாடு குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியில் கொடுமைகளுக்கு ஆளானவர்கள் போன்ற வளர் இளம் பருவத்தினரிடையே எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.


முடிவுரை :-


வறுமை வாழ்விடங்களைக் குறித்த திருப்தியின்மை, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் போன்ற காரணிகளும் வளர் இளம் பருவத்தினரின் உள்ளத்தைச் சிதைக்கும். இத்தகைய தற்கொலை எண்ணங்களிருந்து விடுபட உளவியலாளர்கள் பின்வரும் தீர்வுகளை வழங்குகின்றனர்.


வளர் இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால் எல்லாவித மனநோய்களும் வெளிப்படையாக தெரிவதில்லை. பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் வளர் இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கிய காரணம் தற்கொலையாகும். தங்கள் எண்ணங்களை சக மாணவர்களிடமே முதலில் வெளிப்படுத்துகின்றனர். இவர்களுக்கு பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும் முதல் தேவையே தவிர தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.


புறநானூற்று சூழ்நிலைத்தடைகளும் இன்றைய காலநிலைகளின் பிறழ்ச்சியினால் கால சூழ்நிலைத்தடைகளும் மாற்றங்களை ஏற்படும் நமக்கு புலப்படுத்துகின்றன. சூழ்நிலைத் தடைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவதைப் பெற்று இருப்பது இன்றைய சூழலில் இன்றியமையாதது.


முனைவர் வி.புவனேஸ்வரி, 

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த் துறை,

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி

ஈரோடு மாவட்டம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்