TN Elections: 2021 சட்டசபைத் தேர்தலில் யார் யார் எத்தனை இடங்களில் போட்டி.. 2026ல் என்ன நிலைமை?

Mar 25, 2026,07:01 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதில் ஒரு தெளிவு கிடைக்க ஆரம்பித்து விட்டது.


எப்போதுமே இந்த விஷயத்தில் நாம் தமிழர் கட்சிதான் முதல் ஆளாக களத்தில் இறங்கும். அந்த வகையில், 234 தொகுதிகளுக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரி பாதியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டார் சீமான். தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.


நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள் 3 அணிகளாக களத்தில் இறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக சார்பில் முக்கிய அணிகள் களத்தில் நிற்கின்றன. தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது. இவை தவிர டாக்டர் ராமதாஸ் - சசிகலா ஆகியோர் தனியாக அணி அமைத்துள்ளனர்.


தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் சிக்கல் நிலவி வந்தது. ஆனாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து விட்டது திமுக. அதன் அடிப்படையில் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காணவுள்ள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.


தற்போது கட்சிகள் போட்டியிடும் இடங்களையும், கடந்த முறை அவர்கள் களம் கண்டதையும் வைத்து ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம்.




2021 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மீண்டும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றது.


திமுக 133 இடங்களை வென்று, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை தனியாகவே கடந்து தனிப்பெரும்பான்மை பெற்றது.


ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தோல்வியுற்றாலும், 66 இடங்களைக் கைப்பற்றி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அதன் வாக்கு சதவீதம் 33.29% ஆக இருந்தது, இது திமுகவை விட சுமார் 4.4% மட்டுமே குறைவு.


நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை என்றாலும், 30,42,307 அதாவது 6.58% வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 12,10,667 லட்சம் அதாவது 2.62% வாக்குகளைப் பெற்றது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 6 இடங்களில் 4-ல் வெற்றி பெற்று, மிகச் சிறந்த வெற்றி விகிதத்தைப் பதிவு செய்தது.


கடந்த தேர்தல் மற்றும் தற்போதைய தேர்தலில் கட்சிகள் போட்டியிடும் இடங்கள், வாக்கு சதவீதம் குறித்த ஒரு தரவைப் பார்ப்போம்.


கட்சிகள் 2021 போட்டி2021 வாக்குசதவீதம்2026ல்  போட்டி
திமுக188 37.70%175
அதிமுக191 33.29% 169
காங்கிரஸ்25 4.27% 28
பாஜக20 2.62% 27
பாமக23 3.80% 18
விடுதலைச் சிறுத்தைகள்60.99% 8
இந்தியகம்யூனிஸ்ட் 61.09% 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 60.85% 5
அமமுக171 2.35%

11

தேமுதிக600.48% 10
நாம் தமிழர் கட்சி2346.58% 234
மக்கள் நீதி மய்யம்1422.62% 0



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்