"#420மலை-யால் வேதனை".. தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் கட்சிக்கு முழுக்கு!

Mar 05, 2023,03:03 PM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமை கமலாலாயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வைத்து வியாபாரம் செய்கிறது. இடத்திற்கு ஏற்ப நடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட "420மலை"-யால் மன வேதனை அடைந்ததுதான் மிச்சம் என்று தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை விட்டும் நிர்மல் குமார் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நிர்மல்குமார் கூறியுள்ளதாவது:

பாஜக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பணியாற்றினேன். இன்று விடை பெறுகிறேறன்.



என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும், கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள்,க ட்சி மற்றும் கமலாலாயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம்.

தொண்டர்களை மதிக்காத தான்தோன்றித்தனம் இவற்றுடன் "மன நலம் குன்றிய" மனிதரைப் போல செயல்படும் நபலால் கட்சி அழிவை நோக்கி செல்வதை  ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20சதவீதம்  கூட இல்லை. அதைப் பற்றி துளியும் கவலை இல்லாமல், மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னைப் போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரவை வெளியில் வீராவேசமாக பேசி விட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படிப் பயணிக்க முடியும்.

மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும்அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும் என்று சிடிஆர் நிர்மல்குமார் கேட்டுள்ளார்.



தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் செயலாளராக இருக்கும் நிர்மல்குமார் இப்படி தமிழ்நாடு பாஜக தலைவரை 420 என்றும் செங்கல் செங்கலாக பாஜகவை விற்கிறார் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டி விட்டு விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக் கட்சியான அதிமுகவில் இணைந்தார்

பாஜக தலைமையை கடுமையாக குற்றம் சாட்டிய நிர்மல்குமார் தற்போது பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவில் போய் சேர்ந்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் அவர் இணைத்துக் கொண்டுள்ளார்.


ஏற்கனவே பாஜகவிலிருந்து திருச்சி சூர்யா உள்ளிட்டோர் விலகினர். காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார்.  இந்த நிலையில் நிர்மல்குமார் விலகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை வாழ்த்து!

தன்னை மிகக் கடுமையாக தாக்கி விமர்சித்து விட்டு அதிமுகவுக்குச் சென்றுள்ள நிர்மல்குமாருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை "வாழ்த்து" கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை போட்டுள்ள டிவீட்டில்,  அன்பு சகோதரர் திரு  @CTR_Nirmalkumar
 அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்