சென்னை : திமுக செய்த ஊழல்களுக்கான ஆதாரங்கள் அடங்கிய இரண்டாவது விபர பட்டியல் என்று கூறி டிரங்க் பெட்டி நிறைய ஒரு புகார் மனுவை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியிடம், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார்.
திமுக.,வின் ஊழல்களை ஆதரங்களுடன் வெளியிடப் போவதாக அறிவித்த அண்ணாமலை முதல் பட்டியலை ஏப்ரல் 14 ம் தேதி அன்று வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அண்ணாமலைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழக்கும் தொடரப்பட்டது. முன்னாள் அமைச்சர் டிஆர் பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார். சமீபத்தில்தான் அந்த வழக்கில் ஆஜராகி விட்டு வந்தார் அண்ணாமலை.
ஆனால் விரைவில் 2வது பட்டியல் வெளியிடப்படும் என்று கோர்ட்டுக்கு வெளியே வந்து அறிவித்தார் அண்ணாமலை. இப்பதான் நாங்க சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிச்சிருக்கோம் என்றும் பாஜக வக்கீல்களைப் பாராட்டியும் பேசினார்.

இதற்கிடையில் திமுக குடும்பத்தினர் செய்த ஊழல் பற்றி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனால் திமுக.,வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு. இது போலியானது என திமுக சொன்னாலும் நிதியமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தூக்கி விட்டு, அவருக்கு இலாகா மாற்றி கொடுக்கப்பட்டது. இப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பில்லாத அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே செந்தில் பாலாஜி, பொன்முடி என முக்கிய அமைச்சர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளும் நடந்து வரும் பரபரப்பான நிலையில், திமுக.,வின் ஊழல்களுக்கான ஆதாரம் அடங்கிய இரண்டாவது பட்டியலை டிரெங்கு பெட்டியில் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், அண்ணாமலை அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவீட்டுகளில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து சென்று சந்தித்தோம். இதுதொடர்பாக பாதயாத்திரையின்போது ஊடகங்கள் மற்றும் மீடியா நண்பர்களிடம் விரிவாக விளக்கிக் கூறுவோம். இந்தப் புகார்கள் தொடர்பாக ஊழல் திமுக அரசிடமிருந்து விடைகளை எதிர்பார்க்கிறோம்
மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அண்ணாமலை.
#DMKFiles2 என்ற தலைப்பில் அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்வீட்டில், பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி ஒரு பெரிய பட்டியல் இடம் பெற்றுள்ளது. அவர் இந்த ட்வீட்டை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #DMKFiles2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி முதலிடம் பிடித்துள்ளது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}