ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது  ஏனோ?.. பாஜக கேள்வி

Apr 15, 2023,03:17 PM IST
சென்னை: யாரை காரணம் காட்டி அனுமதி மறுத்தீர்களோ, அவர்களை மறந்து விட்டு, காரணமே இல்லாமல் ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது  ஏனோ? என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறையும் பேரணி நடத்த  அனுமதி கொடுத்துள்ளது. அதேசமயம்,  பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது.

லத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது,  தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக கோஷமிடக் கூடாது, திட்டமிட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும், எந்த  மதத்திற்கு எதிராகவும் முழக்கமிடக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.



இதுகுறித்து நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போர் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது. சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான பாடவோ, கோஷமிடவோ கூடாது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் - தமிழக டி ஜி பி ஷைலேந்திரபாபு.

"ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தால் தடை செய்யப்பட்ட மத அடிப்படைவாத பி எஃப் ஐ அமைப்பினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாலும், சில சமூக விரோத தீய சக்திகள் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியை குலைத்து, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வாய்புள்ளதாலும்" பேரணி நடக்க அனுமதி மறுத்தது காவல்துறை.  ஆனால், பேரணியை அனுமதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த அரசின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்ததோடு, அனுமதியை உறுதி செய்தது. 

அதன்படி,  தடை செய்யப்பட்ட பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக விரோத தீய சக்திகள் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு சென்று பேரணிக்குள் ஊடுருவி விடாமல், ஆர் எஸ் எஸ் பேரணியை எதிர்க்கும் அடிப்படை மதவாத, சாதிய சக்திகள், சனாதன எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு  உள்ளிட்டவை தொடர்பாக பேரணி நடக்கும் இடங்களில் கோஷமிட அனுமதிக்காமல், பேரணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணிக்க வேண்டியது, பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்றே காவல்துறை தலைவரின் அறிக்கை இருந்திருக்க வேண்டும்.

யாரை காரணம் காட்டி அனுமதி மறுத்தீர்களோ, அவர்களை மறந்து விட்டு, காரணமே இல்லாமல் ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது  ஏனோ?

சமீபத்திய செய்திகள்

news

டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு.. அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!

news

ஆடிப் பெருக்கு சரி.. அந்த 18ம் எண்ணுக்கு எவ்வளவு விசேஷங்கள் இருக்கு தெரியுமா?

news

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!

news

விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!

news

காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி

news

இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!

news

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்