சென்னை: டோக்கியோவில் உள்ளது போன்ற ஹெல்த் வாக் சாலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் வருகிறது. நவம்பர் 4ம் தேதி இந்த சாலைகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடங்கி வைக்கப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஹெல்த் வாக் டிராக் என்ற சாலை உள்ளது. அதாவது எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க நடைப் பயிற்சி செய்வோருக்கான சாலையாகும். இங்கு யார் வேண்டுமானாலும் நடைப் பயிற்சி செய்யலாம்.
எட்டு கிலோமீட்டர் என்பது 10,000 அடிகளுக்குச் சமம். இந்த அளவுக்கு ஒருவர் ஒரு நாளைக்கு நடந்தால் உடல் நலம் சரியாக இருக்கும் என்பதால் இந்த எட்டு கிலோமீட்டர் டிராக் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பிரபலமான ஹெல்த் டிராக் ஆகும்.
தற்போது இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மதுரையில் முதல் ஹெல்த் வாக் சாலை அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்த டிராக்கானது, ரேஸ் கோர்ஸ் சாலை முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை அமைக்கப்படுகிறது.
தற்போது இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் அமல்படுத்தவுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஹெல்த் வாக் டிராக்கை நவம்பர் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னையைப் பொறுத்தவரை முத்துலட்சுமி ரெட்டி பூங்கா முதல் பெசன்ட் நகர் சர்ச் வழியாக சென்று மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க்கில் வந்து முடிவடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான சாலைகளில் இந்த ஹெல்த் வாக் டிராக்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த சாலைகளின் இரு புறமும் மரங்கள் நடப்படும். உடல் நலம் குறித்த விளக்க போர்டுகள் வைக்கப்படும். ஆங்காங்கே அமர்ந்து செல்ல இருக்கைகளும் அமைக்கப்படும். இந்த சாலைகளில் மாதம் ஒருமுறை வாக்கத்தான் போட்டிகளும் நடத்தப்படும். மக்களிடையே நடைப் பயிற்சி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த டிராக்குகள் உதவும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினசரி தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளக் கூடியவர். அவர் எங்கிருந்தாலும் அங்கு வாக்கிங் போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அது மழை பெய்தாலும் சரி, மலைப் பகுதியாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி, வெளி மாநிலமாக இருந்தாலும் சரி நடக்காமல் விட மாட்டார் மா.சுப்பிரமணியன். அந்தளவுக்கு உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தற்போது அவரது முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் நடைப் பயிற்சி மேற்கொள்வோருக்காக சிறப்பு டிராக் வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களே இதைப் பயன்படுத்திக்கங்க.. தினசரி நடங்க.. நல்லாருங்க!
தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!
விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்
ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!
ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி
{{comments.comment}}