3வது ஆண்டாக சர்ச்சை.. தமிழ்த் தாய் வாழ்த்தால் தொடரும் சலசலப்பு.. வெளிநடப்பு செய்த ஆளுநர்!

Jan 06, 2025,05:08 PM IST

சென்னை: தொடர்ச்சியாக 3வது ஆண்டாக ஆளுநர் உரை தொடர்பான சர்ச்சை நீடிப்பது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஆளுநர் ஆர். என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. அவ்வப்போது அடங்குவது போல தெரிந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது பெரிதாக வெடித்துச் சிதறுகிறது.  குறிப்பாக ஆளுநர் உரை தொடர்பாக கடந்த 3 வருடமாக சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் முறையாக பெரிய சர்ச்சை வெடித்தது.




2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி சட்டசபை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக திட்டம். ஆளுநர் ஆர். என். ரவியும் சட்டசபைக்கு வந்தார். ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த அவர் அதில் இடம் பெற்றிருந்த சில வரிகளைத் தவிர்த்து விட்டு வாசித்தார். மேலும் புதிதாக சில வாசகங்களையும் அவர் சேர்த்துப் படித்தார். 


அதன் பின்னர் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் அவராக சேர்த்து வாசித்த வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் வாசிக்கப்பட்டபோது ஆளுநர் ஆர். என். ரவி. அவையிலிருந்து வெளியேறிச் சென்றார்.


இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சட்டசபை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கம் போல கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியபோது முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை  என்றார். மேலும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகளை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி உரையை வாசிக்க மறுத்து அமர்ந்து விட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்.


அதன் பின்னர் ஆளுநரின் செயல்பாடு குறித்து அப்பாவு சில கருத்துக்களைக் கூறினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பபடியே அவைக் குறிப்பில் பதிவேற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இந்த ஆண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்து ஆளுநர் வெளியேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்... மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

news

ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்